ஸோ... வணக்கம் சொல்ற நேரம் வந்து விட்டது. ஒரு வார ஒளிவட்டம் தந்ததற்கு தமிழ்மணத்திற்கு என் நன்றி.
மினி மாரத்தான் ஓடியது போலிருக்கிறது. முடித்ததில் நிறைவாகவும் இருக்கிறது. வாசித்த, கருத்து சொன்ன நண்பர்களுக்கு நன்றி.
ஐயோ... சுத்தமா என்னால இதுக்கு மேல எதுவும் எழுத முடியலை. அதனால் இத்தோட முடிச்சுக்கறேன். அடுத்த வார இறுதியில் 27-30 வரை சென்னையில் இருக்கிறேன். தயிர்வடையோடு உட்லாண்ஸோ, சிக்கன் டிக்காவோடு பியர் பாரோ( நீங்க அடிங்கப்பா!) எதுவானாலும் சரி... ஒரு குரல் கொடுங்க. நம்ம பசங்க கிட்ட ஒரு மாலை லீவு சொல்லிட்டு வரேன். ரோமிங்கில் இருக்கும் போது கால் போட்டு தாளிச்சாலும் சரின்னு நம்பர் குடுக்கறேன். நண்பர்களுக்கு இல்லாததா?! ஒன்பது எட்டு மூன்று ஒன்று ஏழு எட்டு பூஜ்யம் மூன்று ஒன்று ஆறு (ப்ரகாஷ் குசும்பு!) பளிச்சுன்னு நம்பர் போடறதுக்கு இது தேவலை!
மெயில் அனுப்பினாலும் சரியே. nivedha_1 at yahoo dot com.
அவ்வளவே. நன்றி. வணக்கம்.
6 comments:
அட புரியவேயில்லைக்கா என்ன சொல்றீங்கன்னு
இதயம் நெகிழ்வுடன்
ரசிகவ் ஞானியார்
posted by: Gnaniyar
ஆரம்ப RKK நாள் முதல் இன்று வரை உங்கள் எழுத்துகளில் உள்ள தோழமையும் இதமும் குறையவே இல்லை. எனக்கும் இப்படித்தான் எழுதப்பிடிக்கும். ஆனா, காட்டாகுஸ்தி, கரடி பல்டின்னு இறங்கிட்டா எங்கே இப்படி எழுத முடிகிறது.
ம்...நடத்துங்க.
-சுந்தர்ராஜன்
posted by: மூக்கு சுந்தர்
ஞானியார் தம்பிக்கு என்ன புரியலைன்னு தெரியலையே?!
நன்றி சுந்தர். எல்லாம் நீங்க எல்லாரும் கொடுத்தது தானே... பேர் சொல்லிக் குறிப்பிடலையே தவிர எப்பவும் அந்த நினைவு இருக்கு.
posted by: nirmala
நிர்மலா,
அருமையான வாரமாக இருந்தது.
வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
துளசி.
பி.கு: அநேகமா ஜனவரி/மார்ச் இந்தியா வரலாம். ஒரு கல்யாணம் வருது.
posted by:
அன்பு நிர்மலா அவர்களுக்கு
தங்களின் நட்சத்திரப்பதிவுகளை கொஞ்சமாவது படிக்க நேரம் கிடைத்தது.
ஆதவன் பற்றிய அந்தப்பதிவு புதியதாக என் கையிலிருக்கும் காகிதமலர்களையும், எ.பெ.ரா வாஇயும் படிக்க வைத்துவிட்டது.
நெகிழ்ச்சியான பதிவுகளுக்கு நன்றி.
நச்சென்று (இருக்கும்) உங்களது கவிதை ரெண்டும் போட்டிருக்கலாமே!
எம்.கே.குமார்
posted by: M.K.KUMAR
வாழ்த்துகளுக்கு நன்றி துளசி. வரும் போது ஒரு மெயில் தட்டிப் போடுங்க.
நன்றி குமார். ஆதவன் உங்ககிட்ட என்ன சொன்னார்? அதைச் சொல்லலையே?!
அப்புறம்... கவிதைகள் போட்டிருக்கலாம். கொஞ்சம் தயார் செய்தும் வைத்திருந்தேன். ஏற்கனவே நிறைய போஸ்டிங் போடுட்ட மாதிரி இருந்ததால, திணிக்க வேண்டாம்னு விட்டுட்டேன்.
posted by: nirmala
Post a Comment