ஒரு படத்தைப் பற்றி எழுதும் போது கதை சொல்லி விடாமல் இருந்தால் பார்க்கிறவர்கள் எந்த முன் அனுமானங்களும் இல்லாமல் பார்க்கலாம்... பார்க்கவும் வேண்டும். அந்த எண்ணத்தில் எழுதின முந்தைய பதிவு அதன் உண்மையான பாதிப்பை ஏற்படுத்தவில்லையோ என்று தோண்றியதால் இந்தத் தொடர் பதிவு.
படத்தில் பாதிப்பை ஏற்படுத்திய காட்சிகளில் ஒன்றிரண்டைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று. பாதிப்பில் அதிர வைத்ததும், நமட்டுச் சிரிப்பு சிரிக்க ஆரம்பித்து கடவுளே என்று நோக வைத்ததும் அடங்கும்.
கிராமத்தில் ஒரு கல்யாணம். கஷ்டப்பட்டு தேடிப் பிடித்து கொண்டு வந்த பதினாலு வயதுப் பெண்ணுக்கும், முப்பது சில்லரை வயது ஆளுக்கும். கல்யாணம் செய்து வைக்கும் புரோகிதர் கம் திருமண புரோக்கருக்கு எங்கிருந்தடா எனக்குத் தெரியாமல் இவனுக்கு பெண் கிடைத்தது என்று சந்தேகம். கடைசி நேரத்தில் ஒருவர் புரோகிதர் காதில் ஏதோ சொல்லிப் போகிறார். மணமக்கள் அக்னியை வலம் வருவதற்கு முன்னால் பெண்ணின் அப்பா இரண்டு இலட்சம் பணத்தையும் இரண்டு மாடுகளையும் கண்டிப்பாகக் கேட்டு வாங்கிக் கொண்டு நைசாக நழுவி விடுகிறார். கடைசி சுற்று வரும் வரை கறுவிக் கொண்டு இருக்கும் புரோகிதர் வெடுக்கென்று மணமகளின் பாவாடையை இழுத்து அவிழ்க்க... அம்மணமாய் நிற்கும் சின்னப் பையன், 'பிதாஜி...' என்று அழத் தொடங்க... மாப்பிள்ளையும், அவருடைய அப்பாவும் அதிர்ந்து நிற்க... கல்யாண மண்டபமே வழித்துக் கொண்டு சிரிக்கிறது.
கதாநாயகி கால்கியை கல்யாணம் செய்து கொண்டு வந்த ஐந்து சகோதரர்களுக்கும் மூத்தவன் நாள் பகிர்ந்து கொடுக்கிறான். ஆளுக்கு ஒரு நாள் ஒதுக்கினதும்,
(அவர்கள் டயலாக் தமிழில்)
'மிச்சம் இரண்டு நாள் இருக்கே? இவ்வளவு பணம் கொடுத்து கட்டிக்கிட்டு வந்து அவளை சும்மாவா படுக்க விடுவது?
'நீங்கதானே பெரிய அண்ணன், அதனால உங்களுக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு நாளு'
'ஏன்டா, என்னங்கடா நினைச்சீங்க? உங்களுக்காக இவ்வளவு பணம் கொடுத்தது யாரு? உங்கப்பாவை மறந்துட்டீங்களே? உங்கம்மா செத்து போய் இவ்வளவு வருஷமா நான் கஷ்டப் படறது உங்க கண்ணுக்கு தெரியலையா?'
பேசி முடித்து முதலிரவு அறைக்குள் நுழையும் மாமனார்.
மாட்டுக் கொட்டகையில் ஒரு கால் சங்கிலியில் கட்டப்பட்டிருக்க, ஈ மொய்க்க கிடக்கும் கால்கி. வரிசையாக மாறி மாறி வந்து போகும் சகோதர்கள். அவர்களில் ஒருவன் வந்து நிற்கிறான். தொண்டையைக் கனைத்துக் கொண்டு வந்திருப்பதை அறிவிக்கிறான். அரைமயக்கத்தில் கிடக்கும் கால்கி, உடையை விலக்கி தயாராகிறாள்.
இவ்வளவு போதும்.
6 comments:
அன்புள்ள நிர்மலா,
எப்படி இருக்கீங்க?
படத்தோட கதையைப் படிச்சதும் அதிர்ந்து போயிட்டேன். என்ன அநியாயமடா இது?
இதுக்கும் மஹாபாரதக்கதைக்கும் சம்பந்தம் இருக்குல்லே!
posted by:
நிர்மலா போன பின்னூட்டம் நான் துளசி. அனானிமஸ் னு சொல்லுது உங்க பொட்டி
துளசி
என்ன படமிது. இதேப் போல ஒரு மொழி தெரியாத படத்தினை சில ஆண்டுகளுக்கு முன்பு டிடியில் பார்த்தது லேசாக நினைவிருக்கிறது. சமீபத்தில் வந்த படமா?
posted by: நாராயண்
பாதித்த படம் கணேசன். பதிவில் சொன்னது வெறும் சாம்பிள் காட்சிகள் தான். முழு படம் இன்னும் நிறைய அதிர்ச்சிகளை வைத்திருக்கிறது.
நன்றி துளசி. பின்னூட்டப் பெட்டி அப்பப்ப கொஞ்சம் தொல்லை கொடுக்குது.
தொலைக்காட்சி செய்திக்குறிப்பு பார்த்த அன்று வீட்டில் இருந்த அம்மா, மாமியார், நாத்தனாரிடம் இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்த போது இதே கமெண்ட் தான் வந்தது ' பாஞ்சாலி கதையாட்டம்'. இவ்வளவே! அதைப் பற்றி மேற்கொண்டு யாரும் எதுவும் பேசாமல் வேறு விஷயத்திற்குப் போய்விட்டது எனக்கு பெரிய ஆச்சர்யம்!
சமீபத்தில் வந்த படம் தான் நாராயண். மனிஷ் ஜா இயக்கம். ட்யூலிப் ஜோஷி, சுதிர் பாண்டே, அப்புறம் பகத் சிங்கில் தேவ்கனோடு உயிர் விடும் நண்பன் கதாபாத்திரத்தில் வருபவர், பெயர் தெரியவில்லை...
posted by: nirmala
adf
posted by: as
ஐயோ!!
"மாயா"வைப் பார்த்தே எனக்கு நிறைய நாள் ஏதோதோ எண்ணங்கள், இரவில் பயமுறுத்தும் கனவுகள் என்று இயங்க முடியாத ஒரு இயலாமை என்னில் குடி கொண்டது. :O(
மனம் கருகாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிற சுயநலவாதியாய் இருந்து விட ஆசைப்படுகிறேன்.
Post a Comment