Sunday, August 14, 2005

நட்சத்திரம் வாழ்த்து சொல்கிறது.

சுதந்திர தின வாழ்த்துகள்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு என் வணக்கங்கள். அறியப்படாமல் போன ஜீவன்களுக்கு இன்னும் கொஞ்சம் கூட குனிந்து ஸ்பெஷல் வணக்கங்கள். சுதந்திரம், சுதந்திர தினம் என்றெல்லாம் தொடங்கப் போவதில்லை. எல்லோருக்குள்ளும் அந்த உணர்வு இருக்கிறது, வெளிப்படுத்திக் கொள்வதில்லை, அவ்வளவே.

இந்த வார நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி. நன்றி கடைசியில் தானே? இப்பவே என்ன என்று யோசிக்க வேண்டாம். இந்த ஒரு வாரத்தில் என்னென்ன எதிர்பார்க்கலாம், எதெல்லாம் கிடைக்காது என்று சொல்ல வேண்டாமா? புத்தகம், சந்திப்பு, சங்கீதம், சினிமா, பயணம் (அதானே... அதில்லாமல் எப்படி?!), கொல்கத்தா ரவுண்ட் இதில் எதெல்லாம் தேறுதோ அதெல்லாம்.

இந்த வாரத்தில் தொழில் நுட்ப முயற்சிகள் எதுவும் இருக்காது. வலைப்பதிவில் எழுதுவதைத் தவிர எனக்குத் தெரிந்த ரெண்டே விஷயம்...படம் போடுவது, லிங்க் கொடுப்பது! அதுவே சமீபத்தில் கற்றுக் கொண்டது தான். ஸோ, உள்ள ஒரே ஆயுதமான எழுத்தைக் கையிலெடுக்க தீர்மாணித்திருக்கிறேன். அப்டின்னா எழுதியே கொல்லப் போறே!ன்னு மனசுக்குள்ள நினைச்சீங்கதானே? நக்கல், நகைச்சுவை இதெல்லாம் இல்லாமல் கொஞ்சம் சீரியஸான வாரமாக இருக்கப் போகிறது என்று முன்னமே சொல்லி வைத்து விடுகிறேன். நமக்கு எழுத்தில் அதெல்லாம் வராது. அது இதற்குள் புரிந்திருக்கும்! ஆனால் கிச்சுக்கிச்சு மூட்டும் வரிகளுக்கு பரம ரசிகை. இணையத்தில் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தவர்களெல்லாம் ஏனோ சீரியஸாகி விட்டார்கள். எனக்கு ரொம்ப சோகம்.

அப்புறம், அங்கங்கே கொஞ்சம் கவிதைப் பூக்களும் பூக்கும். பின்னே.. என் எழுத்துலகப் பயணம்(!) தொடங்கியது கவிதையில் தானே! ஆனாலும் நினைத்த எதையும் எழுதி ஒரு பதிவு என்று போடுவது போல் ஒரு கவிதை எழுதிப் போட முடிவதில்லை. இதைக் கவிதையில் சொல்ல வேண்டும் என்று எதாவது ரொம்ப இம்சை செய்ய வேண்டும். அதை எழுத வார்த்தைகளுக்கு அலைபாய வைக்க வேண்டும். முடிக்கும் வரை அதே யோசனையாயிருக்கச் செய்ய வேண்டும்... அப்படியும் திருப்தியில்லாமல் கைவிடப் பட்டவைகளும் உண்டு. கைவிடப் பட்டவைகளில் எதையாவது சரி செய்ய முடிந்தால் போடுகிறேன். இல்லாவிட்டால் எனக்குப் பிடித்த எதாவது.

சுகமோ, சோகமோ... இந்த வாரத்தை என்னோடு கழிக்க நண்பர்களை வரவேற்கிறேன். ரொம்ப போரடித்தேனென்றால் மதியை தனிமடலில் திட்டலாம். அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழ்மணத்தின் நட்சத்திரப் பகுதியை தவறியும் எட்டிப் பார்க்காதிருக்கலாம்.

சரி...போறதுக்கு முன்னால் ஒரு ஜோக்.

கஸ்டமர்: அண்டர்வேர் காமிங்க.
கடைக்காரர்: ஹிஹி... இன்னைக்கு போட்டுட்டு வரலைங்க.

ஜோக் உபயம்: குஷ்வந்த் சிங்.

17 comments:

Anonymous said...

வருக... வருக...

பிரகாஷ்

posted by: prakash

newsintamil said...

நட்சத்திர + தின நல்வாழ்த்துக்கள்...

posted by:

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

வாழ்த்துக்கள் - நட்சத்திரமானதுக்கும், சுதந்திர தினத்துக்கும் சேர்த்து!

எங்க இன்னும் துளசியக் காணோமே... ;O)

Anonymous said...

வாங்க நிர்மலா வாங்க.
வணக்கம். நட்சத்திரமாக ஜொலிக்க என் ஆசிகள்!!!!

என்னைக் காணோமுன்னு தேடற அன்பு மனத்துக்கு நன்றி. இதோ வந்துட்டேன்.

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
துளசி.

posted by:

newsintamil said...

ஒரு வேண்டுகோள்

அரபுச் சிறைகளில் தவிக்கும் சில இந்தியர்களுக்காக தமிழ் வலைப்பதிவர்களின் அன்பான ஆதரவையும் உதவியையும் வேண்டி...அனுராக்

newsintamil said...அரபுச் சிறைகளில் தவிக்கும் சில இந்தியர்களுக்காக தமிழ் வலைப்பதிவர்களின் அன்பான ஆதரவையும் உதவியையும் வேண்டி...

Ramya Nageswaran said...

வாழ்த்துக்கள்!! பதிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்,
ரம்யா

மதுமிதா said...

அன்பு நிர்மலா

சுதந்திரதின வாழ்த்துக்கள்
நட்சத்திரத்திற்கும் நட்புள்ளங்களுக்கும்

அன்புடன்
மதுமிதா

Anonymous said...

வாழ்த்திய மற்றும் வரவேற்ற ப்ரகாஷ், அனுராக், துளசியைத் தேடின குரலுக்குச் சொந்தக்காரர்!, துளசி, ரம்யா, மதுமிதா மற்றும் நண்பர்களுக்கு நன்றி.

posted by: nirmala

Anonymous said...

ஸ்டாருக்கு வாழ்த்துக்கள்..
பிற, பதிவுகளில்.


posted by: ராம்கி

`மழை` ஷ்ரேயா(Shreya) said...

தேடினது நாந்தான். ஆனா போன ஒரு பதிவில போட்ட பின்னூட்டத்துக்கும் என் பெயர் வரலைங்கோ! there is some issue with ur comment box! :O(

ஷ்ரேயா

ஜெயந்தி சங்கர் said...

i just saw, you are this week's star ! Hm,.. that means there will be a lot to read this week ! vAzththukkaL Nirmala,..
anbudan, Jayanthi Sankari just saw, you are this week's star ! Hm,.. that means there will be a lot to read this week ! vAzththukkaL Nirmala,..
anbudan, Jayanthi Sankar

posted by: jayanthi sankar

posted by: jayanthi sankar

posted by: jayanthi sankar

Anonymous said...

நன்றி ராம்கி, ஷ்ரேயா & ஜெயந்தி. ஐயோ இந்த ஷ்ரேயா பேரை அடிக்கும் போது என்னோட ஸ்கூல்ல கொட்டம் அடிச்ச ஷ்ரேயா ஞாபகம் வருதே!

அது வந்து ஸ்ரேயா... பின்னூட்டப் பெட்டி சிலர் பேரை ஏன் சேர்த்துக்குது சிலரை ஏன் சேர்க்க மாட்டேங்குதுன்னு கண்டுபிடிக்க தெரிஞ்சா இன்னேரம் சரி செய்திருக்கலாம்! தெரியாததால அப்டியே இருக்கு. இனிமே பேரோட போட்டுடுங்களேன் ப்ளீஸ்.

posted by: nirmala

Anonymous said...

வாழ்த்துகள். தூள் கிளப்புங்க..

அன்புடன்,
சுபமூகா

posted by: சுபமூகா

சுபமூகா said...

வாழ்த்துகள். தூள் கிளப்புங்க..

அன்புடன்,
சுபமூகா

Anonymous said...

நன்றி சுபமூகா.

posted by: nirmala

Anonymous said...

test

posted by: xxxx