Wednesday, December 22, 2004

விமானப் பயணங்களும் பார்வை சந்திப்புகளும்

இலக்கில்லாமல் அலைந்த கண்களை
பத்தடி தூரத்திலிருந்து
இழுத்து நிறுத்தியதுன் முதல் பார்வை

யாரோடோ பேசிக் கொண்டே
சரிதானா என்று கேட்டது
இரண்டாம் பார்வை
என்னவென்றே தெரியவில்லை ஆனாலும்
மறுக்க முடியாமல் தலை ஆடியது

சோதனை முடிந்து விலகுகயில்
மெல்ல வருடிச் சென்றது
மூன்றாம் பார்வை

தேடித் தேடிச் சலித்து
மறுபடியும் எதிர்பட்ட போது
கன்னத்தில் இழைந்து முத்தமிட்டது
நான்காம் பார்வை

சற்றே இடைவெளி விட்டு
வலிய உண்டாக்கிய சந்தர்ப்பத்தில்
இடுப்பில் கைகொடுத்து
இழுத்தனைத்து விலகியது
ஐந்தாம் பார்வை

இன்னும் சில சந்திப்புகள் நிகழுமுன்
உன் வீரியப் பார்வை ஆழம் உணருமுன்
சட்டென்று முடிந்து விட்டது நம் பயணம்

விமானப் பயணங்கள் வேகமாய் முடிந்து விடுகின்றன
நீண்ட ரயில் பயணத்தில் உன்னைச் சந்தித்திருக்கலாம்!

7 comments:

Anonymous said...

கவிதை?

Mookku Sundar said...

ஆசிப்பு,

கேட்டுட்ட உடனேயே வந்துட்டாக பார் கவிதையோட...

டீச்சர், சத்தியமா இது நீங்க இப்ப எழுதுன கவிதை இல்லைங்கறேன். என்ன சொல்றீங்க..கரெக்டா..??

சூப்பரா இருக்கு..

Nirmala. said...

சுந்தர், 'இப்பன்னா' நேத்தா??? அப்படின்னா நீங்க சரி. இது இப்ப எழுதினது இல்லத்தான்! :-)

நன்றி.

Anonymous said...

மூக்கனாரே,
"சாத்தான்' வேதம் ஓதுனா யாரால கேக்காம இருக்க முடியும்?
டீச்சர், ரொம்ப டாங்குஸ். என்னமோ கபுஜ எழுதுறதுக்கு எனக்கு
'மழ வர்ற நாளா இருக்கணும். வானம் மங்கலா இருக்கணும்'னு கத
வுட்டீங்களே?!! :-)

Jayaprakash Sampath said...

ஒ... கவிதையா... சரி சரி சரி... அப்புறம் வரேன்

Nirmala. said...

ஆசிப்பு...என்னமோ நேத்து ராத்திரி எழுதி காலைல போட்ட மாதிரி சொல்லுதீக?? இன்னும் மழ வர்ற நாளுக்கும் வானம் மங்கலாகறதுக்கும் காத்துட்டுத்தான இருக்கம்? :-)

Maravandu - Ganesh said...

aaLaaLukku ippadi thani veedu katti kudi
pOyttingannaa e-groupla yaaru ezuthuRathaam .. ? X-( (kaathula pugai vaRukiRa symbol)