Saturday, December 11, 2004

சல்மான் ருஷ்டி

சல்மான் ருஷ்டியுடன் டிசம்பர் 9, ஒரு டாக் ஷோ. நான்கு புக் ஸ்டோர்களின் பெயர் போட்டு, இந்த நேரத்திலிருந்து இந்த நேரத்துக்குள் இலவச நுழைவுச் சீட்டு வாங்கிக்கோன்னு The Telegraph கூப்பிட்டு நான் போவதற்குள் காலியாகிவிட்டிருந்தது. 'ஒரு மணி நேரத்திலயே முடிஞ்சுடுச்சு. நீங்க இப்ப வரீங்களே?'ன்னு கடைக்காரர் கேட்ட போது வழிந்தது.

எல்லா பெரிய புக் ஸ்டோரிலும் எப்பவும் எதாவது புக் ரீடிங் நடக்கிறது. எழுத்தாளர், கூட பதிப்பாளர்(ராத்தான் இருக்கனும்), இருபது முப்பது வாசகர்கள், நீளும் உரை, எப்போதாவது எழும் ஒன்றிரண்டு கேள்விகள்.

ருஷ்டியைப் பற்றி எதுவும் தெரியாது, அவருடைய பெயரைத்தவிர, மனைவி பத்மாலக்ஷ்மியைத் தவிர. இன்ன காரணம்ன்னு சொல்ல முடியாமல் குறுகுறுன்னு க்யூரியாசிட்டி தரும் விஷயங்கள்ல இந்த ருஷ்டியும் ஒருவர் (அந்த லிஸ்ட்ல ஒசாமாவின் கண்கள் கூட இருக்கு). அந்த குறுகுறுப்பில் லைப்ரரியில் இருந்து எடுத்துட்டு வந்த அவருடைய புத்தகங்கள் தலைக்கு மேல பூச்சி பறக்க விட்டதில் அப்போதைக்கு அவரை விட்டு விட்டேன். இப்போ மறுபடியும் இவ்வளவு பக்கத்தில வந்திருக்கார்!

மூன்று நாள் விஜயமாக ஏறக்குறைய இருபது ஆண்டுகள் கழித்து கொல்கத்தாவிற்கு. அவருடைய செப்டம்பர் வெளியீடான Shalimar The Clown நாவல் பற்றி பேசிப் போக. 'கதை ஒரு கொலையில் தொடங்குகிறது. ஆனால் அது, அதை செய்தது யார் என்பது பற்றியல்ல!' என்கிறார் ருஷ்டி. கதையின் கையெழுத்து பிரதியை படித்து விட்ட பத்மா, 'ஆனாலும் அளவுக்கு அதிகமான சஸ்பென்ஸோடு இருக்கிறது. முதல் ஆளாக கதையைப் படிப்பதில் ரொம்ப சிரமம். பின்னாலேயே நின்னு படிப்பதையே கவனிச்சுட்டு இருக்கிறார்!'

'நான் எதாவது ஒரு வரியைக் குறிப்பிட்டு, இதைப் படிக்கும் போது ஏன் சிரிக்கலை? சிரிப்பு வந்திருக்கனுமே?' ந்னு கேட்பேன்,' என்கிறார் ருஷ்டி.

கொஞ்சம் கலைகள் பற்றி, நீண்ட கால நண்பர் ரே பற்றி, தவிர்க்க முடியாமல் கொஞ்சம் அரசியல்... கொல்கத்தா காபி ஹவுஸ் காபி, பழைய நண்பர்கள் சந்திப்பு...

பை பை ருஷ்டி. அடுத்த முறை பார்க்கலாம்!

4 comments:

Maravandu - Ganesh said...

nerriyaa ezuthunga

Chithran Raghunath said...

nalvaravu nirmalA. vishayangaL nandrAga irukkindrana. keep it up. UngaL blogpage title mAdhiri, blog titles-il konjam gavanam selutthalAme.

Mookku Sundar said...

//விஷயங்கள்ல இந்த ருஷ்டியும் ஒருவர் (அந்த லிஸ்ட்ல ஒசாமாவின் கண்கள் கூட இருக்கு//

அட..உங்களுக்கும் இது தோணுதா...

அவரைப் பாத்தா எனக்கு ஒரு மெஸ்மரைசிங் டீச்சர் ஞாபகத்துக்கு வர்றார்.ம்ஹூம்..எதுக்காக இந்த வேஷமோ..??!!

Nirmala. said...

அதையேன் கேட்கறீங்க...ஒசாமாவை உலகமே தேடினப்ப...ஐயோ என் வீட்டுக்கு வந்தா ஒளிச்சு வைச்சுக்குவேனேன்னு சொல்லி... எல்லாரும் முறைக்க...!