கட்டம் போட்ட சட்டையும் ஜீன்ஸ் பேண்டுமாய் ஹே...ஹே... ன்னு கை நீட்டிப் பாடும் ஷாருக்கை ஒரு மாதம் முன்னால் டிவியில் பார்த்த போது பளிச்சென்று வித்தியாசம் தெரிந்தது. இது வழக்கமான ஷாருக்கில்லை. கொஞ்சம் சீரியஸாய்...வித்தியாசமான ஏதோ ரோல் பண்ணரார் போலிருக்குன்னு தோணியது. பஸ்ஸில், தோணியில், ஒரு கூட்டமாய் எல்லாரும் உட்கார்ந்திருக்க 'யே தாரா வோ தாரா...' அதிகம் நீடிக்காமல் சட்டென்று முடிந்து விட, பெரிய தலைகள் பெயர்கள் வரிசையாக பின்னால். இசை ரஹ்மான், டைரக்ஷன் லகான் புகழ் ஆஷ¤தோஷ், பாடல்கள் ஜாவேத் அக்தர்...
ஸ்வதேஷ், ரஹ்மானின் ஒன்னொரு பூங்கொத்து. ஹரிஹரன் கொஞ்சமாய் தலைகாட்டிப் போக, உதித் நாராயணன் கிளை விரித்திருக்கிறார். எனக்குப் பிடித்த எல்லா ஆண் பாடகர்களும் ஒவ்வொரு அலை அடித்து போவார்களென்றால் (சோனு குரல் கேட்டாலே பத்து வயசு குறைஞ்சுட்ட மாதிரி இருக்கும்) அதில் எப்போதும் இந்த உதித் நாராயண் மட்டும் ஒரு அலர்ஜி. இந்த முழு ஒலிநாடாவிலும் முதல் முறையா உதித் நாராயண் அவருக்கென்று ஒரு அதிர்வுகள் கொடுத்துப் போனதற்கு காரணம் என்ன?
'யூ ஹி சலா' துள்ளிக் கொண்டு போகிறது, கூடவே கேட்பவரையும். ஜாவேதின் வரிகளும் இசையும்... சரியான கலவை. அம்மாவின் வாழ்த்து விழாவில் இதை ஹரிஹரனும் வேறொருவரும் தமிழில் பாடியது சுத்தமாக ஒட்டவில்லை. 'யே சாலையே யே சாலையே எங்க போகிற' ன்னு ஜுனூன் மொழிபெயர்ப்பு மாதிரி.
ஆஹிஸ்தா ஆஹிஸ்தா... ஒரு மயக்கும் தாலாட்டு. ரஹ்மானின் 'யே ஜொ தேஷ் ஹை மேரா' வும் அல்காவின் 'சாவரியா' வும் ... ஒவ்வொன்றாய் என்ன அறிக்கையா இது? ராத்திரி பத்து மணிக்கு மேல விளக்கெல்லாம் அணைச்சுட்டு உறுத்தாத சத்தத்தில் போட்டு விட்டால் போதும், கூடவே கரைந்து போகலாம். சங்கீதத்துக்கு என்ன பாஷை? வரிகளுக்கு அர்த்தம் புரிந்து கேட்டால் நல்லது, இல்லன்னாலும் அது சொல்ல நினைத்ததை உணர்த்தாமல் போகாது. ஷகீராவையெல்லாம் புரிந்து கொண்டா கேட்டோம்(பார்த்தோம்!)? ஹி..ஹி... நேத்து அவங்க பாட்டு எதோ சேனல்ல ஓடினதுல பழய ஞாபகம்!
3 comments:
Nirmala,
Thanks for this post. I was expecting someone write about this album
Suresh Kannan
நல்லா எழுதுறீங்க !! நிறைய எழுதுங்க !
சுரேஷ், நீங்க தமிழ் 'தேசம்' கேட்டதற்கு ஹிந்தி ஸ்வதேஷ்.
ஜெ, நன்றி. கவிதைகளுக்காக நானும் காத்திருக்கிறேன்!
நன்றி ரவியா.
சந்திரமுகி, ஒரு ஹிந்தி பாட்டின் ரெண்டு வரியை ஒரு இடத்தில உபயோகப்படுத்த மொழிபெயர்க்கப் பார்த்ததில் முழி பிதுங்காத குறைதான்! இரா. முருகன், ஆசாத் பாய், ஷக்திக்கெல்லாம் மனசார ஒரு கும்புடு போட வைத்துவிட்டது!
Post a Comment