Wednesday, December 15, 2004

'கிஸ்னா' கேட்டீங்களா?

'தால்' க்குப் பிறகு சுபாஷ் கை(Ghai), ரஹ்மான் கூட்டணி. கூடவே இஸ்மாயில் தர்பார், (முதல்முறையாக?) ஜாவேத் அக்தர். நேரமில்லாததால் இரண்டு பாட்டும் தீம் ம்யூசிக் மட்டும் ரஹ்மான் போட மீதியை இஸ்மாயில் தர்பார் பார்த்துக் கொண்டதாக சுபாஷ் கை உள் அட்டையில் நுணுக்கி நுணுக்கி எழுதியிருக்கிறார். ஆனா எந்த ரெண்டு பாட்டுன்னு எங்கயும் குறிப்பிடவில்லை. முதல் தடவை கேட்கும் போது இதுவா இதுவான்னு குழம்பி... அப்புறம் சே எதுக்கு இந்த ஆராய்ச்சியெல்லாம்... அனுபவிக்கலாம்னு விட்டுட்டேன்.

சுரேஷ் ஓபராய், கூட இரண்டு புதுமுக நடிகைகள். சுதந்திரத்திற்கு முன் இமயமலைச் சாரலில் நடக்கும் கதை என்று குறிப்பு சொல்கிறது. ஒவ்வொரு சுற்றுக்கும் சரிந்து சரிந்து கோணம் இறக்கும் அந்த பெண் கால்....ப டத்தில் ஒரு நல்ல டான்ஸ் கட்டாயம் இருக்கு. 'ஹம்ஹே இஸ் பல் யஹான்', 'து இத்னி பக்லி க்யூன் ஹை', 'சில்மன் உடேகி நஹி' இது மூன்றும் ரொம்ப ஸ்வீட்.

உச்சஸ்தாயில் உயரும் சங்கீதம் மெல்ல மெல்ல சத்தமாகுதோன்னு ரிமோட்டைத் தேட வைக்கும் இடங்களை தவிர்த்திருக்க வேண்டுமோ? எனக்கென்னவோ அதெல்லாம் தான் இஸ்மாயில் தர்பார் பாட்டுகள்னு தோணுது!

வர வர என்னமோ வாரத்துக்கு தக்காளி வாங்கற மாதிரி கேசட் வாங்க ஆரம்பிச்சிருக்கேன்!

10 comments:

Boston Bala said...

இன்னும் காஸெட்தானா? நீங்க சிடிக்கு மாறவில்லையா?

icarus prakash said...

பாலாஜி....காலை ஆறு ஐம்பத்தைந்துக்கு நிகழ்ச்சிக் குறிப்புகள் கேட்டுவிட்டு, புடிச்ச படம் பேர் சொன்னால், TDK காசட் ஒன்றை எப்படியோ உசார் செய்து, டூ இன் ஒன்னில் இருந்து ரிக்கார்ட் செய்து, மீண்டும் மீண்டும் போட்டுப் பார்க்கலாம். பாட்டுப் போரடித்து விட்டால், அதை அழித்து விட்டு, இன்னொரு பாட்டை ரெக்கார்ட் செய்து மீண்டும் மீண்டும் போட்டுப் பார்க்கலாம். இழை தேய்ந்து போய்,அறுந்து விட்டால், நடுவே வெட்டி, குயிக்·பிக்ஸ் போட்டு ஒட்டி, ரீசைக்களிங் வித்தை கற்றுக் கொள்ளலாம். அப்படியும் உள்ளே மாட்டி சிக்கிக் கொண்டால், அக்கக்காகக் கழற்றி, ஒலிபேழை சேதமாகாமல் எடுத்து, டேப்ரிக்கார்டர் மெக்கானிசம் கற்றுக் கொள்ளலாம்.

ஹ¥ம்ம்ம்ம் என்னமோ போங்க ( சே என்னையும் இது தொத்திக்கிச்சே..:-)

Nirmala said...

º¢ýÉ ¸¡Ã½õ ¾¡ý... ¿õÁ ¸¡÷Ä þÕ츢ÈÐ §¸ºð ô§ÇÂá!

¬É¡ ôø¡‰, þó¾ TDK ºÁ¡îº¡Ãõ ºÃ¢ôÀðÎ Å÷Ⱦ¢øÄ. ´Õ §¸ºð §À¡ð¼¡ «ó¾ õäº¢ì ¨¼Ã켧á¼ ãð ÅóмÛõ. þôÀÊ §¾÷ó¦¾ÎòÐ ¦Ã측÷ð Àñ½¢É¡ ¸îº¡ÓýÛ ´Õ ãð ÅÕÐ!!!

Anonymous said...

"சுரேஷ் ஓபராய், கூட "

It is Vivek oberoi.

GS

Nirmala said...

oops!!!! thanks for the correction GS.

Anonymous said...

நிர்மலா,இந்தியத் திரையிசையில் கடைசியாக வந்த ஒரு மாபெரும் மேதை என்றே நான் இஸ்மாயில் தர்பாரைச் சொல்வேன் .

எனது பார்வையில் ரஹ்மானுக்கு சற்றும் சளைத்தவர் அல்லர் இஸ்மாயில் .

சுகா

Nirmala said...

இவ்வளவு நாள் முன்னால எழுதின ஒரு போஸ்டிங்கிற்கு எதிர்பாராத இந்த கமெண்ட்!

ரொம்ப பிடித்துப் போன ஒன்றிலிருந்து வெளியே வர விருப்பமில்லாமல், எதைக் கேட்டாலும் அதையே நினைவு படுத்திக் கொண்டு... என்ன சொல்ல! கிஸ்னா கேட்கும் போது எது ரஹ்மான் என்ற தேடலில் வந்த 'இதுவா?, அதுவா?'தான் அது!

நன்றி சுகா.

Nirmala said...

சுகா... ஆமா அது என்ன கடைசியாக?!

Anonymous said...

இந்தியத் திரையிசையின் எதிர்காலத்தை , கடந்த காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எனக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது . அதனால்தான் "கடைசியாக" .

Nirmala said...

ஓ!!!