Friday, December 10, 2004

மீனாக்ஷி

M.F. ஹ¤சைனின் 'கஜகாமினி' யோடு ஏற்கனவே இரண்டு முறை முட்டிப் பார்த்த அனுபவம் இருந்தது. முதல் முறை இழுத்துக் கொண்டு போன தூக்கத்திற்கு ஞாயிற்றுகிழமையின் ஹாலிடே மூடும், சிக்கன் பிரியாணியும் தான் காரணமென்று நினைத்தேன். இரண்டாவது முறை சொதப்பலுக்கு, கூட இருந்து கேலியில் தொலைத்த மகள் தான் காரணம்.

'மீனாக்ஷி' ஒலிநாடா வந்த போது ரஹ்மானுக்காக வாங்கியதும், போதும் விட்டுடுன்னு அது சொல்லும் வரை ஓட்டித் தேய்ததும் வேறு விஷயம். படம் சிடி கடையில் பார்த்த போதெல்லாம் கஜகாமினியைச் சொல்லியே மகள் வாங்க விடவில்லை. இந்த முறை தடுக்க ஆளில்லாமல் ஒரு வழியாக மீனாக்ஷி வந்தே விட்டாள்.

முதல் சிடி பார்த்ததும் 'இதைப் பற்றி எழுதனுமே'ன்னு தூண்டியது. தூண்டலோட வேகம் கொஞ்சம் கூட தான். சும்மா இல்ல... ப்ளாக் தொடங்கி எழுத வைத்த வேகம். கதை என்ன? இந்த முறையும் நிச்சயமாக சொல்ல முடியவில்லை. முங்கேரிலாலுக்கு நவாப் வேஷம்... திருப்தியில்லை! தபுவின் பளிங்கு முகம் பொருந்தின அளவு உருவம் பொருந்தவில்லை. வெள்ளை உடை ஹைதராபாத் தபுவையும் ஜெய்சல்மீர் தபுவையும் விட ப்ராக் (Prague) தபு தேவலை(அந்த மைக்கல் ஏஞ்சலோ ஓவிய சீன் தவிர). செதுக்கினது போல இருக்கும் ஹீரோ குனால் கபூர் நடிக்க அதிகம் முயற்சி செய்யவில்லை. ஆனாலும் ஆள் ஸ்மார்ட்.

எல்லாம் இப்படி இருந்தும் அது ஒரு கலர்புல் கனவு. தொடர்பில்லாத நிகழ்வுகளோடு கனவு வருவதில்லையா? அது போலத்தான். இடையிடையே வந்து போகும் ஒற்றை ப்ரேமில் எத்தனை கவிதைகள். கதை ஓவ்வொரு ஊரில் நடக்கும் போது அங்கேயே இருக்கும் உணர்வு தருவது எது?

மொத்தத்தில் அதிகம் யோசிக்காமல் எதிலாவது கிறங்கிப் போகும் அனுபவம் வேண்டுமென்றால் தாராளமாக பார்க்கலாம்.

நிர்மலா.

2 comments:

Mookku Sundar said...

//மொத்தத்தில் அதிகம் யோசிக்காமல் எதிலாவது கிறங்கிப் போகும் அனுபவம் வேண்டுமென்றால் //

நல்ல வரி. நடக்காதுன்னு தெரிஞ்சும் லவ் பண்ணித் தொலைச்சிட்டு, பிறகு முழிக்கிற மாதிரி...

ம்ம்..தூள் கிளப்புங்க டீச்சர்..!!!

Unknown said...

டீச்சர், கஜகாமினியிலே எங்க மாதுரியை பத்தி சொல்லாம போறிங்களே :-).

உங்க பதிவு "Anonymous User"ன்னா போடான்னு வெளியிலே தொறத்திடும் போல, கொஞ்சம் சரி பண்ணுங்க.