Monday, February 07, 2005

the memoirs of Protima Bedi



சென்ற முறை சென்னை சென்றிருந்த போது கண்ணில் பட்ட புத்தகம். கறுப்பு வெள்ளையில் அட்டை பூராவும் சிரிக்கும் ப்ரொதிமாவின் க்ளோசப் முகம்... பெரிய சிவப்புப் பொட்டுடன். அன்றைய வாங்கும் கோட்டா ஏற்கனவே முடிந்து விட்டிருந்தது. வாங்கிய லிஸ்டில் memoirs of a geisha ஏற்கனவே இருந்ததில் இதை அப்போதைக்கு விட்டு விட்டாலும் மிஸ் பண்ணியது உறுத்திக் கொண்டிருந்தது. (அதை இன்னும் படிக்கவில்லை என்பது வேறு விஷயம்!)

சமீபத்தில் கொல்கத்தா காலேஜ் தெருவில் பழைய புத்தகக் கடையில் மறுபடியும் கண்ணில் பட்ட போது யோசிக்க வேண்டியிருக்கவில்லை. விலை வேறு ரொம்ப குறைவாக. (இந்த புத்தகங்களையெல்லாம் யார் பேப்பர்காரருக்கு போடுகிறார்கள்? ஏன்?!) பின் அட்டையில் நீல நிற அங்கியும் மொட்டை அடித்து சற்றே முளைத்த முடியோடு ப்ரொதிமாவும். பக்கத்தில்

' I have broken every single rule that our society has so carefully constructed. I have known no barriers. I have done precisely what I bloody well felt like doing and never given a damn. I have flunted my youth, my sex, my intelligence, and I have dont it shamelessly. I have loved many, been loved by some...'

இதை வாசித்த பிறகு இந்த புத்தகத்தை படிக்க ஒரு வாகான தருணத்திற்கு காத்திருக்க வேண்டியதாகப் போயிற்று.

வாய்த்தது இந்த முறை சென்னை பயணத்தின் போது. முதல் வகுப்பின் நான்கு இருக்கையில் இரண்டு பேர் கடைசி வரை ஏறவேயில்லை. ஏறிய ஒருவரும் புத்தகமும் கையுமாக ஒரு வார்த்தை கூட பேசப்போகும் அறிகுறியில்லாத என்னைப் பார்த்து படுக்கையை விரித்தவர் தான். குறட்டையைத் தவிர வேறு சத்தமில்லை! ராத்திரி படுக்கப் போகுமுன் ஏனோ அடுத்த கேபினுக்கு மாறிக் கொண்டார்! எதிர்பாராமல் வாய்த்த இந்த தனிமை இந்த புத்தகத்தோடு இன்னும் ஒன்றிப் போக வசதியானது.

ப்ரொதிமாவால் தொகுக்கப் பட்டது. அவருடைய மகள் பூஜா பேடி இப்ராஹிம் முயற்சியால் வெளிவந்திருக்கிறது. சிக்கல்கள் நிறைந்த குழந்தைப் பருவம், பள்ளி வாழ்கை, வேகம் நிறைந்த வாலிப வயது , பேடியுடனான லிவ் இன் ரிலேஷன்ஷிப்... ஆரம்பமே நிறைய ஆச்சர்யங்களோடு.

தடுமாற்றங்கள் நிறைந்த... கவன ஈர்ப்புக்கு போராடும்... சலனங்களோடு இயல்பாக பயணிக்கும்... குழந்தைகளுக்கு அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் நிறைந்த அம்மாவாக... இருபத்தி ஆறு வயதில் ஒடிசி கற்றுக் கொள்ள ஆரம்பித்தது... நேசித்த ஆண்கள்... நேசிக்கப் பட்டது... தனி ஆளாய் நிருத்யாகிராம் அமைய போராடியது... மகனை இழந்தது... நாற்பத்து சொச்சம் வயதில் கூட யாருக்கோ காதலியாய் இருந்தது...

சென்னையில் இறங்கும் போது புத்தகம் முடிந்து விட்டது. ப்ரொதிமாவுடன் என் பயணமும். ஏறக்குறைய என் அம்மாவின் வயது இவருக்கு. இருவருடைய வாழ்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எனக்கு ப்ரொதிமாவுடையது பிடித்திருந்தது.

6 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//ப்ரொதிமாவுடன் என் பயணமும். ஏறக்குறைய என் அம்மாவின் வயது இவருக்கு. இருவருடைய வாழ்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எனக்கு ப்ரொதிமாவுடையது பிடித்திருந்தது.//

இந்த வரிகள், இந்தப் புத்தகத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ளத் தூண்டுகிறது நிர்மலா.

தனியே செல்லும் பயணங்கள் ஒரு தனிரகம் இல்ல! எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அதுவும் ரயில்ல போகணும்னு ஆசை.

ப்ரோதிமாவின் இந்தப் புத்தகத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் கூடச் சொல்லுங்களேன்.

-மதி

Jayaprakash Sampath said...

// இருவருடைய வாழ்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எனக்கு ப்ரொதிமாவுடையது பிடித்திருந்தது.//

Pooja Bedi may think otherwise :-)

Anonymous said...

she was an icnoclast.she was unconventional, perhaps a rebel without a cause.obviously she was talented and
was torn in different directions. i have read some articles about her .wish you had put her pic in the blog.but in 2005 what was once unconventional is
no longer shocking.this is just an observation.
wichita

Nirmala. said...

ஸோ.. புத்தகத்தை விட என்னோட பயணம் பிடித்திருக்கிறது! :-) நிஜமா சென்னைல இறங்கவே மனசில்லை. மதி, ஜெ... எனக்கென்னவோ புத்தகமோ சினிமாவோ... சும்மா இன்ட்ரோ பண்ணி விட்டுடணும்னு தோணுது. அப்பத்தான் உங்களுக்கு சந்தர்ப்பம் வரும் போது எந்த முன் அனுமானங்களும் இல்லாம ரசிக்க முடியும்.

ப்ரகாஷ், அதையும் யோசிக்காம இருந்திருப்போமா?!

விசிதா... அதைத்தான் 'தடுமாற்றங்கள் நிறைந்த' ன்னு சொல்லியிருந்தேனே? வாழ்ந்து முடிச்சப்பறம் தானே தெரியுது எதுக்காகவெல்லாம் வெட்டியா போராடிணோம்னு

Anonymous said...

ஒரு புத்தகத்தை இந்த அளவுக்கு அறிமுகப்படுத்துவதுதான் சரி.நீங்கள் சொன்ன மாதிரி அப்போதுதான் எவ்வித முன் அனுமானங்களும் இல்லாமல் புதிதாய் படிப்பவர்கள் உள்ளே நுழைவார்கள்.

Nirmala. said...

ஆமாம் சுகா. கை காட்டுவதோடு என் வேலை முடிந்தது. அவரவர் ரசனை அவரவருக்கு. :-)