
குந்தர் கிராஸ் - ஆர்கேகேயில் மதியும் முருகனும் இவரைப் பற்றிச் சொல்ல, பேர்(!) கேட்டது. மற்றபடி இவரைப் பற்றி அதிகம் எதுவும் ¦தரியாது. இரண்டு நாட்களாக இங்கே செய்தித்தாளில் இவரைப் பார்க்கிறேன். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், கவிஞர், ஓவியர், சிற்பி என்றெல்லாம் பத்திரிகை அறிமுகப்படுத்துகிறது. பதினெட்டு வருடங்கள் கழித்து இந்தியா வந்திருக்கிறார். 86-87 ல் ஆறுமாதம் இந்தியாவில் இருந்திருக்கிறார். மேக்ஸ் முல்லர் பவன் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
'ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறிய போதும், அரைமணி நேரத்தில் பழைய கொல்கத்தாவை உணரத் தொடங்கிவிட்டேன்' என்று சொல்கிறார். எதையோ காணவில்லை, இழந்த மாதிரி இருக்கிறது என்று குழம்பி... காணாமல் போனதாக, கொல்கத்தா தெருக்களில் அலைந்த மாடுகளை நினைவு படுத்திக் கொண்டார்!
காந்திஜியின் கல்கத்தா வாசம், நேதாஜி - காந்திஜி முரண்பாடுகள், பிரிவினை .. எல்லாவற்றையும் நினைவுகூர்கிறார். இரண்டு நாள் கெ¡ல்கத்தாவில் கழித்து விட்டு பாருய்பூர்(Baruipur) செல்ல இருக்கிறார். சென்ற முறை தங்கியிருந்த தோட்ட வீட்டிற்கு செல்லும் ஆவலோடு. 'அந்த வீடு, தோட்டக்காரர், அவருடைய மனைவி, மகனைப் பார்க்கப் போகிறேன். என் மனைவி அவர்களுக்கு பரிசுகள் கூட அனுப்பியிருக்கிற¡ர்' என்று சொல்லும் கிராஸ் ஆச்சர்யப்படுத்துகிறார். அவருடைய இத்தனை முகங்களுக்கும் ஆதாரம் புரிகிறது.
சென்றமாதம் ருஷ்டி, இப்போது கிராஸ்... கொல்கத்தாவோடு இவர்களுடைய பிணைப்பு... கொல்கத்தாவை இந்தியாவுக்கு அதிகம் தெரியாதோ என்று தோண்றுகிறது. எனக்கு இத்தனை நாள் தெரியலைதான்.
இன்று மாலை கலாமந்திரில் அமிதவ் கோஷ், டி.என்.மதன், நஜாம் சேதியுடன் உரை நிகழ்த்த இருக்கிறார். கிரிஷ் கர்னாட் நிகழ்ச்சிக்கு மாடரேட்டர். The Segregation of Cultures in the Contemporary World: Clash, Convergence or Cooperation? - தலைப்பு கொஞ்சம் மிரட்டியதில் போய் பார்க்கலாமா என்று நேற்று தோண்றிய எண்ணத்தை மூட்டை கட்டி வைத்து விட்டேன். சாயந்திரம் நேரமும் இல்லை. நாளைக்கு ஊருக்குக் கிளம்பணும், கேவியார் கல்யாண வரவேற்புக்கு.
4 comments:
கொஞ்சகாலமா இந்த தமிழ்மணம் பக்கமே வராமால் இருந்தது... இப்படி ஒரு வலைப்பதிவு வந்திருக்கு, நிறைய விஷயங்கள் எழுதுறாங்கன்னே தெரியாம போய்டுச்சு. இன்று இந்த குந்தர் கிராஸ்-ல ஆரம்பித்து பின்னோக்கி வணக்கம் போடுற வர ஒரே சிட்டிங்ல படிச்சேன். அருமை, ரொம்ப நன்றி. தொடர்ந்து எழுதுங்க டீச்சர்.
Show your tongue என்று கல்கத்தாவைப்பற்றி குந்தர் கிராஸின் கோட்டுச்சித்திரங்களடங்கிய புத்தகமொன்று உள்ளது. மாக்ஸ்ம்யுல்லர் பவன்களின் நூலகங்களில் கிடைக்கும். பார்த்துவிட்டு, உங்களுக்கு என்ன தோன்றியதென்று எழுதவும்.
தொடர்ந்து எழுதுங்க நிர்மலா. உங்க எழுத்து எப்படி இதமா இருக்குன்னு சொல்லியிருக்கேன். அடிக்கடி எழுதுங்க.
அப்படியே இதையும் கேளுங்க - http://www.dhool.com/sotd2/571.html
பி.கு.. கேவியார் திருமண வரவேற்பிற்கு எங்க அம்மாவும் போறாங்க. அங்க யார் யாரையெல்லாம் பார்ப்பாங்கன்னு தெரியலை. நீங்க யாரையெல்லாம் பார்த்தீங்கன்னு வந்து சொல்லுங்க.
-மதி
Off-topic question: Did U get a chance to hear 'Black Friday'?
Post a Comment