ரகசியங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் -
அதிர்ச்சியூட்டுபவையாக, சிறுபிள்ளைத்தனமாக, உணர்வுப்பூர்வமாக... என்று தன்
வலைத்தளத்தை அறிமுகப்ப்டுத்துகையில் ப்ராங்க் சொல்கிறார். 2004 ம் ஆண்டு
நவம்பர் மாதம் 3000 போஸ்ட் கார்டுகளை வாஷிங்டன் நகர தெருக்களில் விநியோகம்
செய்த போது அது இவ்வளவு தூரம் விரிந்து பரவும் என்று யூகிக்கவில்லை
என்கிறார்.
ஒரு பக்கம் காலியாகவும் மற்ற பக்கத்தில் அவருடைய விலாசமும் எளிய விதிமுறைகளோடும் கொடுத்த அட்டைகள். இன்றைக்கு வெவ்வேறு வடிவம் பெற்று உலகின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் வந்து சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத அரை மில்லியன் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளும் வலைத்தளம்.
ரகசியங்களை வாசிக்கும் போது முகமும் பெயருமற்ற அத்தனை மனிதர்களோடும் வெவ்வேறான உணர்ச்சிகளால் தொடர்ப்பு கொள்ள முடிவது நிஜம். மெல்லிய முறுவல், சிறு அதிர்வு, சோகம் எதற்கும் குறைவில்லை. தன்னை அழுத்தி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ரகசியங்களில் இருந்து விடுபடத்தான் இப்படி ஒன்றை ஆரம்பித்ததாக சொல்லும் இவருக்கு அரை மில்லியன் அனுபவங்கள்!
கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் மனிதர்களை அறிந்து கொள்ள முடிவதில்லை, எங்கோ தொலைதூரத்தில் இருக்கும் யாரோவின் ரகசியங்களை அறிய முடியவது... நல்லதா கெட்டதா?!
ஜன்னல் பகுதி - குங்குமம் தோழி, மார்ச் 2013 இதழுக்காக எழுதியது.

No comments:
Post a Comment