Friday, January 07, 2005

no lipstick please, you're teachers

கொல்கத்தாவின் ஒரு பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரின் உத்தரவு இது. ஜனவரி 1 முதல் வகுப்பறைக்கு வரும் போது கண்மை, உதட்டுச் சாயம், நெற்றிப் பொட்டு, தொங்கும் காதணிகள், கண்ணைப் பறிக்கும் ஆடைகள் மற்றும் செல்பேசிகள் தவிர்க்க வேண்டும் என்று. நான்கு ஆசிரியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். உதட்டுச் சாயத்தோடு வந்த அவர்களை இரண்டு நாட்களாக வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை.

நேற்று திரினாமுல் காங்கிரஸின் பெண்கள் பிரிவு பள்ளிக்கூடத்தின் முன்னால் கோஷம் எழுப்பியிருக்கின்றனர். தலைமை ஆசிரியரிடம் தடையை வாபஸ் வாங்கச் சொல்லிப் போராட்டம். இரண்டு நாட்களாக பத்திரிகையில் முதல் பக்கத்தில் அடிபட்ட செய்தி இன்றைக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. சத்தத்தையே காணம்?!

செய்தியைப் படிக்கும் போது எங்கள் பள்ளிக்கூடம் தான் நினைவு வந்தது. அங்கேயும் இதே கதைதான். நிர்வாகம் சார்ந்த பிரிவினர் எந்த ஆபரணமும் அணிவதில்லை. ஆகவே மற்றவர்களும் அதையே பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருந்து, பின் மிகுந்த வேண்டுகோளுக்குப் பின் மெல்லியதாக ஒரு கழுத்துச் சங்கிலியும் ஒரு சின்னப் பொட்டும் காதில் சின்னதாக ஒரு கம்மலும் அனுமதிக்கப் பட்டிருந்தது.

ஆண் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கூடமே blazer க்கு துணியும் கொடுத்து தையல் கூலியும் கொடுத்து... ம்ம்ம்... எல்லாரும் ஜோர் தான். அதைக் கழட்டிட்டு வெளியே காஷ¤வலாக நிற்கும் போது தான் blazer செய்யும் மாயம் தெரியும்!

சேர்ந்த புதிதில் இது எதுவும் தெரியாததால் வழக்கமாக ஏதோ தொங்கட்டான் போட்டுக் கொண்டு ஒரு நாள் பள்ளிக்குச் செல்ல ஒரு ஆசிரியை, "உங்களுக்கு இந்த கம்மல் ரொம்ப அழகாயிருக்கு" என்று சொல்ல நானும் சந்தோஷமாக நன்றி சொல்ல, "இதெல்லாம் ஸ்கூல்ல போடக்கூடாது தெரியுமா? நாங்களே ரொம்ப கஷ்டப்பட்டு சின்ன கம்மலுக்கு அனுமதி வாங்கியிருக்கிறோம். நீங்க இப்படிப் போட்டா இதையும் கூடாதுன்னு சொல்லிடுவாங்க" என்று சொல்லி என்னை 'ஙே' ன்னு முழிக்க வைத்தார்.

அவர் சொன்னதற்காக அப்போது அதை தவிர்த்து விட்டாலும் அந்தக் கோலத்தில் பள்ளிக்கூடம் போவது என்னவோ அழுது வடிவது போலத்தான் இருந்தது. போகப் போக எல்லாம் கொஞ்சம் மாறிப் போனது. புடவைதான் கட்ட வேண்டும்... ஓக்கே. செல்பேசி வகுப்பறையில் கூடவே கூடாதுதான். ஆனால் கொஞ்சம் மேக்கப்... என்னைக் கேட்டால் தப்பில்லை!

பளிச்சென்று உடுத்திக் கொண்டு லேசா மேக்கப் போட்டு ப்ரெஷ்ஷா வகுப்பறைக்குள் நுழையும் போது குழந்தைகள் கண்களில் தெரியும் உற்சாகத்திற்காக இந்த விதிகளையெல்லாம் தாராளமாக மீறலாம்!

6 comments:

Anonymous said...

நீங்க சொல்லற மேட்டரு ரைட்டு, ஆனா சமயத்துல டீச்சருங்க கொஞ்சம் ஓவரா போய் பொம்பள பசங்க டீச்சர் சொல்லற பாடத்தை விட்டு டீச்சர் டிரெஸ், செயின், பொட்டு ன்னு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுடுறாங்க. பசங்க க்ளாஸ் பொண்ணுங்களை விட்டு டீச்சரைல சைட் அடிக்கறாங்க.

விஷமமான ஒரு எண்ணம் : நல்லா விசாரிச்சு பார்த்தா ஸ்கூல் பெரிய தலை சம்சாரமோ அல்லது பொண்ணோ சுமாரா இருக்கும், நம்மள விட இவளுங்க அழகா வர்றதா அப்படின்னு இந்த 'பெண்தொகொஸ்தே' டிரெஸ் ஆ இருக்கலாம்.

Boston Bala said...

>>>>டீச்சருங்க கொஞ்சம் ஓவரா போய் பொம்பள பசங்க டீச்சர் சொல்லற பாடத்தை விட்டு டீச்சர் டிரெஸ், செயின், பொட்டு ன்னு வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுடுறாங்க. பசங்க க்ளாஸ் பொண்ணுங்களை விட்டு டீச்சரைல சைட் அடிக்கறாங்க.-------

டீச்சரை பள்ளி மாணவர்கள் சைட் அடிப்பதற்கு உளவியலில் ஏதாவது தியரி இருக்கலாம். ஆனால், சிம்பிளா வந்தாலும் (நேற்று பெப்ஸி உமாவோடு வந்த பூஜா போல்) அட்டகாசமாய் தோன்றுவது எல்லாம் பார்க்கும் பார்வையில் இருக்கிறது. மேக்கப் போடாவிட்டாலும் மேடமை 'அப்படி' பார்ப்பவர்கள் பார்த்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

மாணவிகளுக்கு ரோல் மாடலாக இருக்க நினைக்கும் டீச்சர்கள், டிப்-டாப்பாக வரவேண்டும். அழுது வடியும் தோற்றத்தில் வந்தால் ஆசிரியரின் தன்னம்பிக்கையும் குறையலாம். வெளிச்சம் குறைந்த அறையில் நுழைந்தவுடன், சோர்வு தொற்றிக் கொள்ளும். ப்ரொஃப்ஷனலாக தோன்றாத ஆசிரியரிடம் மாணாக்கர்களுக்கும் பாடம் கேட்க டல்லடிக்கும்.

பினாத்தல் சுரேஷ் said...

Well Dressed, Glamourly Dressed, Simply Dressed -- A teacher can be anything.. but He/She should have good teaching capabilities so that the students diverts their attention from the physique of the teacher to the Subject of teaching. For a good Teacher, the impression of dress will remain for only for the first few seconds..then the attention shifts..

Chithran Raghunath said...

என்னமோ போங்க! எனக்கு எங்க சயின்ஸ் டீச்சர் ஞாபகத்துக்கு வர்ராங்க!!

dondu(#11168674346665545885) said...

"விஷமமான ஒரு எண்ணம் : நல்லா விசாரிச்சு பார்த்தா ஸ்கூல் பெரிய தலை சம்சாரமோ அல்லது பொண்ணோ சுமாரா இருக்கும், நம்மள விட இவளுங்க அழகா வர்றதா அப்படின்னு இந்த 'பெண்தொகொஸ்தே' டிரெஸ் ஆ இருக்கலாம்."
இதுவும் ஒரு முக்கியமானக் காரணமே.
விக்டோரியா மஹாராணியின் ஆட்சிக்கு முன் இங்கிலாந்தில் பாலியல் சம்பந்தமாக எந்த எதிர் மறை எண்ணமும் கிடையாது. குண்டுக் குதிரை மூஞ்சியுடைய விக்டோரியா வந்தாலும் வந்தார், எல்லோருக்கும் சனியன் பிடித்தது. தன் உருவம் பற்றிய தாழ்வுணர்ச்சியே அப்பெண்மணியை வாட்டிப் படைத்தது. ஆகவே தேவையில்லாமல் மடிசஞ்சி எண்ணங்களை வளர்த்து, இன்று வரை இங்கிலாந்திலும் அதன் ஆளுமைக்குட்பட்ட இந்தியா முதலிய நாடுகளிலும் அவற்றின் தாக்கம் உள்ளது.
"உதிரிப்பூக்கள்"-இல் வரும் ஊர்ப்பெரிசு விஜயனுக்கு நீச்சல் தெரியாததால் கிராமத்தில் யாரும் நீந்துவது தடை செய்யப்பட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவியா said...

" காக்க காக்க " ஜோதிகா டீச்சர் எனக்கு ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்..