Sunday, January 02, 2011

இன்றும்...

சர்வ காலமும் சுமந்தலைகிறேன்
சலசலத்து நகர்ந்து கொண்டிருந்தது
கோபங்களால் துரோகங்களால்
குரோதத்தால் காதல்களால்
நிரப்பிச் சேர்த்ததில் ததும்பி நிற்கிறது

ஆவேசம் கொள்கிறது
ஆனந்தக் கூத்தாடுகிறது
மௌனத்தில் ஆழ்கிறது

குறிப்பறிந்து சிதறும் சாரல்களில்
கடும் புயல்களைக் கடக்கும்
உரம் கொள்கிறது

சீண்டல்களில் புரண்டெழும் ஞாபகங்களில்
தொலைந்து போகிறது
தேடிக் கண்டடைகிறது
தெளிவுறுகிறது

அகம் ஆர்ப்பரித்த போதும்
ஓர் அணக்கம் காட்டாதிருக்கிறது

ஆழ்கடலென்பதற்கு மேல் அதை
அறிந்தார் எவருமில்லை.

5 comments:

Chithran Raghunath said...

ரொம்ப நாள் கழித்து ஒலிக்கிறது போலிருக்கிறதே கணங்கள். மீள் வருகை நன்று.

Chithran Raghunath said...

//அகம் ஆர்ப்பரித்த போதும்
ஓர் அணக்கம் காட்டாதிருக்கிறது

ஆழ்கடலென்பதற்கு மேல் அதை
அறிந்தார் எவருமில்லை.//

நல்ல வரிகள்.

நிலவாழ்வான் ஆதவன்... said...

Hi,

good..

See my blog

www.humalaniman.blogspot.com

mahmoo said...

to author;

yenathu appavinin theyaham
yelimaiil karainthu pohirath
yenathu theyaham en
oonathil(PH) marainthu pohirathu.,


pls continue
and just inform my mail

R.Gopi said...

வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......

தமிழின் ஆளுமை படு பிரமாதம்...

சீறும் கடலலையென தமிழின் வீச்சு இருக்கிறது...

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்...

வாழ்த்துக்கள் நிர்மலா...

**********

நேரமிருப்பின் :

எங்களின் முதல் முயற்சியான ”சித்தம்” குறும்படத்தை இங்கே கண்டு ரசியுங்கள்...

பார்ட் - 1
http://www.youtube.com/watch?v=VyVNcRKKGt4&feature=mfu_in_order&list=UL

பார்ட் - 2
http://www.youtube.com/watch?v=0fkLqLhdmGw

தோழமையுடன்

ஆர்.கோபி, துபாய்
www.jokkiri.blogspot.com / www.edakumadaku.blogspot.com