Friday, November 02, 2007

காது வேட்டை

முடிந்து போனதற்காய் தவித்த பொழுதில்
முதல் காதல் படபடப்பில்
தடம் மாறி யோசனைகள்
உதித்த கணத்தில்

இப்படியொன்றில் தான்
தொடங்கியிருக்க வேண்டுமென்
காது வேட்டை

சொல்வதெல்லாம் கேட்பதாய்
கிரகிக்கவோர் மூளை கொண்டதாய்
பாரமேற்ற பிரதி யோசனை சொல்ல
குரலென்றொன்று இல்லாததாய்
அழுகையில் கரையும் வார்த்தைகளின்
அர்த்தம் தேடாததாய்...

தேடலனுபவம் தெளிவித்ததில்

ஆன்மீகக் காதுகள் வேண்டாம்
உயர்ந்து நெறியுமதன்
புருவ முடிச்சிலென்
வார்த்தைகள் சுணங்கிப் போகும்

விடலைக் காதுகள் வேண்டாம்
விளையாட்டுப் பொழுதுகளில்
துணையாயிருக்கட்டும்
என் எண்ணங்களின் கனம் தாங்க மாட்டா

என் போல் சுகித்து என் போலே துக்கிக்கும்
என்னினக் காதுகளும் வேண்டாம்
விடைகாணுமென் சூத்திரங்கள்
எழுப்பப் போகும் கண்டனங்களில்
ஏற்கனவே சலித்திருக்கிறேன்

சகவயது காதுகளில்
முதிர்ச்சி தேடுகிறேன்
முதிர்ந்த காதுகளின்
பழமையில் மிரள்கிறேன்

கல்தெய்வத்திடம் சொல்லப்படும்
ஓசையில்லா வேதனை சுமப்பவர்கள்
தேடல் முடிவில் சரணாகதியடைந்த
யாரோவின் வழித்தோன்றல்களாயிருக்கலாம்
தொடருமென் தேடலின்
தோல்வி முடிவில்
நானே தீர்வாகலாம்

என் காதுகள்...

சொல்வதெல்லாம் கேட்பதாய்
கிரகிக்கவோர் மூளை கொண்டதாய்
பாரமேற்ற பிரதி யோசனை சொல்ல
குரலென்றொன்று இல்லாததாய்
அழுகையில் கரையும் வார்த்தைகளின்
அர்த்தம் தேடாதாய்....

நன்றி: யுகமாயினி.

15 comments:

மதுமிதா said...

காதுவேட்டை அருமை நிர்மலா:-)

கவிதை வேட்டைக்கான எல்லா இலக்கணமும் பொருந்தியிருக்கிறது
ஆரம்பியுங்கள் பயணத்தை:-)

மதுமிதா said...

///முடிந்து போனதற்காய் தவித்த பொழுதில்
முதல் காதல் படபடப்பில்
தடம் மாறி யோசனைகள்
உதித்த கணத்தில்

இப்படியொன்றில் தான்
தொடங்கியிருக்க வேண்டுமென்
காது வேட்டை///



நல்லதொரு ஆரம்பம்:-)

மதுமிதா said...

///சொல்வதெல்லாம் கேட்பதாய்
கிரகிக்கவோர் மூளை கொண்டதாய்///

பாரதியின் தீர்க்கம் தெரிகிறது.

மதுமிதா said...

///பாரமேற்ற பிரதி யோசனை சொல்ல
குரலென்றொன்று இல்லாததாய்
அழுகையில் கரையும் வார்த்தைகளின்
அர்த்தம் தேடாததாய்...///

கொஞ்சம் தன்னிரக்கம் எட்டிப்பார்க்கிறதே:-)

மதுமிதா said...

///தேடலனுபவம் தெளிவித்ததில்///

Superb.

மதுமிதா said...

///ஆன்மீகக் காதுகள் வேண்டாம்
உயர்ந்து நெறியுமதன்
புருவ முடிச்சிலென்
வார்த்தைகள் சுணங்கிப் போகும்///

நல்லதொரு வார்த்தைப் பிரயோகம்:-)

மதுமிதா said...

///விடலைக் காதுகள் வேண்டாம்
விளையாட்டுப் பொழுதுகளில்
துணையாயிருக்கட்டும்
என் எண்ணங்களின் கனம் தாங்க மாட்டா///

முற்றிலும் உண்மை:-)

மதுமிதா said...

///என் போல் சுகித்து என் போலே துக்கிக்கும்
என்னினக் காதுகளும் வேண்டாம்
விடைகாணுமென் சூத்திரங்கள்
எழுப்பப் போகும் கண்டனங்களில்
ஏற்கனவே சலித்திருக்கிறேன்///

No words to write.
Great.

மதுமிதா said...

///சகவயது காதுகளில்
முதிர்ச்சி தேடுகிறேன்
முதிர்ந்த காதுகளின்
பழமையில் மிரள்கிறேன்///

ரொம்பவும் முதிர்ச்சியான வரிகள்.

மதுமிதா said...

///கல்தெய்வத்திடம் சொல்லப்படும்
ஓசையில்லா வேதனை சுமப்பவர்கள்
தேடல் முடிவில் சரணாகதியடைந்த
யாரோவின் வழித்தோன்றல் களாயிருக்கலாம்///


இருக்கலாம்:-)

மதுமிதா said...

///தொடருமென் தேடலின்
தோல்வி முடிவில்
நானே தீர்வாகலாம்///

வெற்றிக்கும் நீங்களே தீர்வாகலாம்:-)

மதுமிதா said...

///என் காதுகள்...

சொல்வதெல்லாம் கேட்பதாய்
கிரகிக்கவோர் மூளை கொண்டதாய்
பாரமேற்ற பிரதி யோசனை சொல்ல
குரலென்றொன்று இல்லாததாய்
அழுகையில் கரையும் வார்த்தைகளின்
அர்த்தம் தேடாதாய்....
///


மிக்க நன்றி!

சொல்வதை காதுகொடுத்து கேளுங்கள் நிர்மலா:-)

மதுமிதா said...

அருணா, உஷா இன்னும் வரவில்லையா?

காதுகொடுத்து கேட்கிறீர்க‌ளோ இல்லையோ சொல்ல வேண்டியதை உல‌க‌றிய‌ சொல்லியாகி விட்ட‌து நிர்ம‌லா:-)

அருணா உஷா சாட்சி!!
அருள்வாக்கு கொடுத்தாகிவிட்ட‌து:-)

PKS said...

கவிதையை வலைப்பதிவில் இட்டமைக்கு நன்றி.

// சகவயது காதுகளில்
முதிர்ச்சி தேடுகிறேன்
முதிர்ந்த காதுகளின்
பழமையில் மிரள்கிறேன்
//

அது!

- பி.கே. சிவகுமார்

Nirmala. said...

நன்றி மதுமிதா... அத்தனையையும் ஒன்றாகவே போட்டிருக்கலாம்! கூட கொஞ்சம் குறையலசலும் செய்திருக்கலாம்!

நன்றி பிகேஎஸ்.