Wednesday, March 21, 2007

me n my weirdness

மொதல்ல இந்த weirdness பற்றி எழுதணுமான்னு ஒரு கேள்வி இருந்தது... நான் யார்.. எனக்கு பிடிச்சது என்ன... பிடிக்காதது என்ன... என் கிறுக்குத்தனங்கள் என்ன... இதெல்லாம் ஒரு நெருங்கின வட்டத்திற்கு மட்டும் தெரிந்த விஷயமா இருக்கணும்னு என்ற சிந்தனை இருந்தது. அப்புறம், இதில என்ன இருக்கு? நான் நான் என்று பேசறது எல்லாமே என்னோட ப்ளஸ் மட்டுமேவா? இந்த கிறுக்குத்தனங்களும் தானே? அதனால எழுதிட்டேன்! இப்படி ஒரு ஞானோதயம் கொடுத்த அலெக்ஸ்க்கு நன்றி.

1. எதுவாவது என்னை ரொம்ப பாதிக்கும் போது அதிலிருந்து வெளியே வர நான் செய்யும் முயற்சிகள் அந்த சூழ்நிலைக்கு கொஞ்சமும் பொருந்தாதாயிருக்கும்... உதாரணமா, எல்லோரும் சாப்பாடு தூக்கம் தொலைத்து சோகம் சுமக்கும் சூழ்நிலையில் நான் வயிறு முட்ட சாப்பிட்டு சுகமா தூங்கிடுவேன்!

2. கன்னா பின்னா தன்னம்பிக்கை, அதைவிட அதிக கன்னா பின்னா சிந்தனைகள்!

3. ரொம்ப அமைதியா டிப்ளமேடிக்கா வெளிப்பார்வைக்கு இருக்கும் எனக்கு எப்பவாவது மறை கழண்டால் போச்சு... சிரித்து தள்ளிடுவேன்... அந்த நேரத்தில் 'சிரி' ன்னு சொன்ன கூட நான் ஸ்டாப் சிரிப்புதான்... ஆச்சரியமா யாராவது பார்க்க ஆரம்பித்தால் இன்னும் அதிகமாக!

4. எல்லோரும் துணையோட, குடும்பத்தோட போகணும்னு நினைக்கிற இடங்களுக்கு தனியே போக விருப்பம்... காபி டே, சினிமா தியேட்டர், கோவில் ஏன் தொலைதூரப் பயணங்கள் கூட... கடைசிக்கு மட்டும் வீட்டு அய்யா இன்னும் அனுமதி கொடுக்கத் தயங்குகிறார்!

5. எதாவது ஒன்று வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டு காத்துக் கொண்டேஏஏஏ இருந்து ஒரு கட்டத்தில் வேண்டாம் போ என்று முடிவு செய்த பின் மடியிலேயே வந்து விழுந்தாலும் 'நோ' தான்!

எனக்கு பிறகு யாரை அழைப்பது என்ற பெரிய குழப்பம் நீடித்ததால்... it is open to everybody who wish to continue...

10 comments:

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்லாயிருக்கே!

//எதாவது ஒன்று வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டு காத்துக் கொண்டேஏஏஏ இருந்து ஒரு கட்டத்தில் வேண்டாம் போ என்று முடிவு செய்த பின் மடியிலேயே வந்து விழுந்தாலும் 'நோ' தான்!//

போக்கிரி விஜய் மாதிரி.. ஒரு முற முடிவெடுத்தா நீங்க சொல்றதையே நீங்க கேக்கமாடீங்க.. வெரு குட்

:)

icarus prakash said...

//இடங்களுக்கு தனியே போக விருப்பம்... காபி டே, சினிமா தியேட்டர், கோவில் ஏன் தொலைதூரப் பயணங்கள் கூட... //

தொலைதூர பயணம், கோவில், சினிமா எல்லாம் ஓக்கே.... காஃபிடேக்கு எப்படிங்க தனியா போக முடியும்?

Nirmala said...

அய்யோ கடவுளே... இந்த போக்கிரி படம் பார்க்கலையே அலெக்ஸ்!

ப்ரகாஷ்... கொல்கத்தால இருக்கும் போது வேற வழியில்லாம ஆரம்பிச்சது... அதுவே பிடிச்சுப் போயிடுச்சு! காபிடேல தனியா உட்கார்றதுல ஒரு செளகரியம் என்னன்னா... நம்ம கவனம் எங்கயும் சிதறாம மக்கள் என்ன செய்யறாங்கன்னு நோட்டம் போடலாம்! ரொம்ப சுவாரசியமா இருக்கும் தெரியுமா?!

கவிதா|Kavitha said...

நிர்மலா.. ஒருத்தர் ஒருத்தரா.. எல்லாரும் அவங்க இன்னோரு குணத்தை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.. நல்லாத்தான் இருக்கு.. நார்மலா நம்மை அடுத்தவங்க பார்க்கறத்துக்கும்.. இப்படி வித்தியாச குணங்களை பார்க்கறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. ஆஹா..இவங்க இப்படியான்னு..?!!! :))

பதிவு நல்லா இருக்குங்க..

Nirmala said...

ஆமாம் கவிதா... நேத்து மகள்கிட்ட இதைப் பற்றி பேசும் போது 'உனக்கென்ன பைத்தியமா... இதையெல்லாம் யாராச்சும் சொல்லுவாங்களா'ன்னு கேட்டாள்... ஆனாலும் சொல்லணும்னு தோணுச்சு... சொல்லிட்டேன்! நம்மளைப் பார்த்து நாமே சிரிச்சுக்கறதுக்கு ஒரு சந்தர்ப்பம்!

ramachandranusha said...

நிர்மலா..வே எழுதிய பிறகு, கவிதா இனிமேல நான் தப்பிக்க முடியாது :-)
நிம்மி, அந்த தனிமையில் இனிமை காணும் விஷயம் எத்தனை முறை பேசியிருக்கிறோம் இல்லையா?

Nirmala said...

உஷா அதென்னா ...வே?! இழுவை பலமா இருக்கு! :-) அந்த தனிமை... இனிமை... பேசிக்கிட்டே இருக்கோம்... இன்னும் முழுசா முடிய மாட்டேங்குது! :-(

ramachandranusha said...

இல்லையா பின்ன? நீங்க எல்லாம் வாராது வரும் மாமணிகள் ஆச்சே :-)

Jazeela said...

// சிரித்து தள்ளிடுவேன்... // இதுதான் கொஞ்சம் பயமா இருந்தது. //தொலைதூரப் பயணங்கள் கூட...// உங்க வீட்டு ஐயா அனுமதிக் கொடுத்தா இந்த பக்கம் கொஞ்சம் வந்திட்டுப் போங்க. நிறைய தனிமை அனுபவிக்கலாம் ;-)

Nirmala said...

அட! எழுதாம இருந்தா இப்படி ஒரு பட்டமா?! :-)

ஜெஸி... அடுத்த வாரம் நான் கேட்ட இடத்துக்கு தனியா அனுப்பறேன்னு தெரியாம வாயைக் கொடுத்துட்டு தலைவர் ஏற்கனவே முழிச்சுட்டு இருக்கார்! பாவம் ரொம்ப டென்ஷன் படுத்தக்கூடாது! உங்க பக்கமெல்லாம் மெதுவா பார்த்துக்கலாம்!