Sunday, October 15, 2006

உயிர்மை.. நான்கு புத்தகங்கள்... சாரு

கவனமாகப் பாரு என்று நண்பர் அனுப்பியிருந்த மின்னஞ்சல் சொன்னது சாருவின் புத்தக வெளியீட்டு விழாவைப் பற்றி. அவர் கவனமாகப் பார்க்கச் சொன்னது வெளியீட்டு விழா அழைப்பிதழில் இருந்த பிரகாஷ்ராஜ், பார்த்திபன் பெயர்களை. பிரகாஷ்ராஜ் ஓக்கே... பார்த்திபன் கூடவா?! கமலையும் பிடிக்கும் பார்த்திபனும் பிடிக்கும்... இதென்ன ரசனை எனறு அவர் சலித்துக் கொள்ளும் போதெல்லாம் தோற்றம் தாண்டி ஒவ்வொருவருக்கும் ஒரு ஈர்க்கும் விஷயம் இருப்பதை சொல்ல முயன்றதில்லை. அங்கே போக வேண்டும் என்ற முதல் தூண்டலுக்கு அவர்கள் காரணமாக இருந்தாலும் தமிழ் புத்தக வெளியீடு அதுவும் இது போன்ற பெரிய அளவில் என்பது தான் பெரிய ஆச்சர்யமாக இருந்தது. ஏதோ ஒரு இருட்டு கல்யாண மண்டபத்தில் இருந்திருந்தால் ஞாயிறு மாலையை அங்கே கழித்திருப்பேனா என்பது சந்தேகம் தான்.

ஆறு மணிக்கு அரங்கிற்குள் நுழையும் போதே நிறைவான கூட்டம். அரைமணி நேரம் வெட்டியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிறகு மேடையேறி தொடங்கி வைத்தவர்கள்... திரு. நல்லி குப்புசாமி, முன்னாள் தொலைக்காட்சி...(?) திரு. நடராஜன், திரு. நாஞ்சில் நாடன், திரு. ட்ராஸ்கி மருது, திருமதி. கனிமொழி, திரு. ரா.பார்த்திபன், திரு. சாரு நிவேதிதா மற்றும் அவருடைய எழுத்துகளை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் அன்பர் (பெயர் நினைவில்லை). பிரகாஷ்ராஜ் மிஸ்ஸிங். (இப்படி ஆனாலும் ஆகும் என்று முன்னாலேயே வெறுப்பேற்றியிருந்த நண்பருக்கு என் மனமார்ந்த எரிச்சல்கள்).

நல்லி குப்புசாமி, நடராஜன் வரவேற்புரைகளை தொடர்ந்த நாஞ்சில் நாடன் பேச்சைக் கேட்கும் போது சமீபத்தில் சென்னை வந்திருந்த உஷா சொன்ன போதும் கூட அவரைப் படிப்பதில் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்று யோசிக்க வைத்தது. அவருக்கு சாருவில் மேல் உள்ள முப்பதாண்டு கால பொறாமையைச் சொல்லி முன் அனுமாணங்களை விலக்கி, வாசித்து விட்டு திட்டச் சொன்னார்!

கனிமொழி சாருவால் தத்தெடுக்கப்பட்டு தான் அறிந்து கொள்ள முடிந்த உலக இசை மற்றும் உலக சினிமா பற்றி பேசினார். பழசாகிப் போன ஒரு ஜோக் சொல்லி சிரிக்க வைத்தார்! அவரால் இறுக்கம் தளர்ந்ததை மறுக்க முடியாது. மருதுவின் வேறு தளப் பேச்சு சொல்ல வந்த விஷயத்தின் ஆழத்தை உணர்த்தினாலும் உள் வாங்கிக் கொள்ள முடியவில்லை. மொழிபெயர்ப்பாளரின் மலையாள உரை ரசிக்க முடிந்தது. வரிசையில் கடைசியாய் குறிப்புகளைப் பார்த்துப் பேசிய பார்த்திபனின் பேச்சில் ஒரு ப்ளோ இல்லாமல் போனது ஏமாற்றம்.

முடிவாக சாருவின் நன்றி உரை. வழக்கமான நன்றி அறிவிப்புகளைத் தொடர்ந்து தமிழ் இலக்கிய உலகால் எப்போதும் ஒதுக்கப்படுவதும், சுய ஒப்பீடுகளும்... இத்தனை உயரங்களை அடைந்த பின்பும் இந்த எதிர்பார்ப்புகள் இருக்குமா என்ற ஆச்சர்யம்.

ஒன்பது மணிக்கு எல்லாம் முடிய கிளம்பும் போது இரவு உணவு ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லி இருக்கச் சொன்ன போதும் அசௌகரியமாக இருந்தது. சுரேஷ் கண்ணன் வற்புறுத்தியிருக்காவிட்டால் இருந்திருக்க மாட்டேன். இருந்திருக்காவிட்டால் சில அறிமுகங்கள் நிகழாமல் போயிருக்கும். சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த எங்கள் பேச்சில் இயல்பாகக் கலந்து கொண்ட எஸ். ராமகிருஷ்ணன்... மனுஷ்ய புத்திரனுடன் ஒரு ஹலோ... எல்லோரும் சொன்னது போல விமர்சனங்கள் இருந்தாலும் பாராட்டாமல் விட முடியாத சாரு...

ஒரு நிறைவான மாலை.

12 comments:

சுரேஷ் கண்ணன் said...

பதிவிற்கு நன்றி.

ஆனால்... மிகச் சுருக்கமாக இருந்தது போல் தோன்றுகிறது. நானும் முயன்று பார்க்கிறேன்.

Nirmala said...

எழுதுங்க சுரேஷ். நன்றி.

ramachandranusha said...

இத்தனை உயரங்களை அடைந்த பின்பும் இந்த எதிர்பார்ப்புகள் இருக்குமா என்ற ஆச்சர்யம்//

நிம்மி, கொஞ்சம் அதிக அளவே சுயபச்சாதாபம் இல்லையா? என்ன செய்ய வேண்டும் என்கிறார்? ஸ்டாம்பு வெளியிட வேண்டுமா அல்லது தீபாவளி காலையில் வணக்கம் தமிழகத்தில் கூப்பிட்டு பேசணுமா? திரும்ப, திரும்ப மலையாள உலகம் எழுத்தாளரை அப்படி நடத்துகிறது இப்படி மரியாதை கொடுக்கிறது என்கிறார். அங்கும் பெரிசாய் ஒன்றும் வித்தியாசமில்லை என்றார் மலையாள
நண்பர். ஆசிப் மீரான் போன்று மலையாள இலக்கிய உலகையும் அறிந்தவர் சொல்ல வேண்டும்.

நாஞ்சில் நாடன் சிறுகதைகளைப் பற்றி எழுத வேண்டும். நினைவுறுத்தியதற்கு நன்னி :-)

Boston Bala said...

---இத்தனை உயரங்களை அடைந்த பின்பும் இந்த எதிர்பார்ப்புகள் இருக்குமா என்ற ஆச்சர்யம்.---

எழுதுவதே எதிர்பார்ப்பினால்தான் என்பது தாத்பர்யம் ; )

Nirmala said...

¯„¡, §À¡É Á¡ºõ ¦ƒÂ¡ ËÅ¢ ¸¡¨ÄÁÄ÷Ä þó¾ Å¢„Âò¨¾ ²Èį̀È þ§¾ Å¡÷ò¨¾¸ûÄ ¦º¡øÄ¢ô ÒÄõÀ¢Â¢Õó¾¡÷! btw, «ÎòÐ Å¡º¢ì¸ô §À¡ÅÐ ¿¡ïº¢ø ¿¡¼ý ¾¡ý!

À¡Ä¡, þýÛõ ¦¸¡ïºõ ¦ÁîÝâðʨ ±¾¢÷À¡÷ò§¾ý!

Mookku Sundar said...

நிர்மலா,

சாருவிடம் போய் மெச்சூரிட்டியை எதிர்பார்த்தேன் என்கிறீர்களே...??
உங்களிடம் இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டியை எதிர்பார்த்தேன்.
:-) :-)

சாரு என்னைப் பொறுத்தவரை வேஸ்ட்.
கலகம் என்பதை ஒழுக்க மதிப்பீடுகளை உடைப்பது மட்டும் என்று தனக்கு கேளிக்கையான வகையில் புரிந்து வைத்திருக்கிறார்.

Anonymous said...

//ஆசிப் மீரான் போன்று மலையாள இலக்கிய உலகையும் அறிந்தவர் சொல்ல வேண்டும்.//

என்ன வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலிய? உள்ளதுக்கே வழியக் காணோமாம். இதுல மலையாள இலக்கிய உலகையும் அறிந்தவராம். 'எளக்கியவாதி'ன்னு திட்டுறதுன்னா நேரடியா திட்ட வேண்டியதுதானே? எதுக்கு இப்படி சுத்தி வளைக்கணும்?

ஒருவகையா, ஒலித்த கணங்களை ஒலிக்கும் கணங்களாக்கியதுக்கு நன்றி!
நல்லா இருங்க!!

சாத்தான்குளத்தான்

Nirmala said...

-------------
சாரு என்னைப் பொறுத்தவரை வேஸ்ட்.
கலகம் என்பதை ஒழுக்க மதிப்பீடுகளை உடைப்பது மட்டும் என்று தனக்கு கேளிக்கையான வகையில் புரிந்து வைத்திருக்கிறார்
--------------

þøÄ Íó¾÷, ÅÆì¸Á¡ ÒÆí¸È Åð¼ò¨¾ Å¢ðÎ ¦ÅÇ¢§Â À¡÷ì¸ ¸¢¨¼ìÌõ §À¡Ð º¢Ä Á¾¢ôÀ£Î¸û Á¡Èò¾¡ý ¦ºöÔÐ. ¿¡¦ÁøÄ¡õ ¦¸¡ïºÁ¡ º¢ÖôÀ¢ì¸¢§È¡õ. þó¾ ÁÛ„÷ ²¸òÐìÌ! :-)

ramachandranusha said...

நிம்மி! ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமரன் என்று சிலுப்பிக் கொள்வது அந்த அந்த காலத்துக்கு ஏற்ப இருந்தது :-)
ஆனால் இவரிடம் எழுத்தைவிட, சுய பெருமை அதிகமாய் இருக்கு இல்லையா?

லிவிங் ஸ்மைல் said...

// Mookku Sundar said...

சாரு என்னைப் பொறுத்தவரை வேஸ்ட்.
கலகம் என்பதை ஒழுக்க மதிப்பீடுகளை உடைப்பது மட்டும் என்று தனக்கு கேளிக்கையான வகையில் புரிந்து வைத்திருக்கிறார். //

அதே.. அதே....

Nirmala said...

¯„¡, º¢ÖôÀ¢ì¸¢È¾¡ ¿¡ý ¦º¡ýÉÐ ' ±ÉìÌ þ¾¢¦Ä¦ÂøÄ¡õ ¿õÀ¢ì¨¸ þø¨Ä' óÛ ¿¡Á §¾¡¨Çì ÌÖì¸¢ì ¦¸¡û§È¡§Á «¨¾! :-)

Nirmala said...

welcome vidya.

asif... nandri directed to Nalli kuppuswamy chettiar! :-)

sorry makkals... font problem!