Friday, March 24, 2006

மிஸ் யூ கொல்கத்தா

ஒன்றரை வருட கொல்கத்தா வாழ்கை ஒரு செவ்வாய்கிழமையோடு முடிந்து போனது. கிளம்ப வேண்டும் என்றான போது நூறு கை கொண்டு கொல்கத்தாவை துழாவ வேண்டும் போலிருந்தது. தேடிப் பார்த்த சிலதும் பார்க்க முடியாமல் போனதும், பெங்காலி சினிமாவுமாய் கழிந்த கடைசி நாட்கள். கொஞ்ச வருஷமாய்
கொண்டிருக்கும் வைராக்கியம் விலகி நின்று கைகட்டி வேடிக்கை பார்த்ததும், 'மனுஷங்களோட ஒட்ட மாட்டேன்னு தானே சொன்னே... இப்போ ஊரோட ஒட்டிப் போனியே... பாத்தியா உன்னால இப்பவும் முடியலை'ன்னு சிரித்துக் கொண்டே சொன்னதும் கேட்டது.

ரோட்டிற்கு அந்தப் பக்கம் இருந்து, பார்க்கும் போதெல்லாம் வெறும் புன்னகை மட்டும் பரிமாறிக் கொண்டிருந்த மிஸஸ். எதிர்வீடு (இப்பவும் பெயர் தெரியாது)... திடீரென்று வந்த ஞானோதயத்தில் முந்தின இரவு போயிட்டு வரேன் என்று சொல்லி வரப் போனதும், எங்கெல்லாமோ அலைபாய்ந்த பேச்சு வலைப்பதிவிலும், கொல்கத்தா தேடலிலும் வந்து நின்றதில், 'நாம் முன்னரே சந்தித்திருக்க வேண்டும்' என்று இருவருக்குமே தோன்றியது. இன்னும் பத்து வருஷம் போனால் கையில் எடுத்தாலே உதிர்ந்து விடும் போலிருக்கும் ஒரு இரட்டை தலையணை சைஸ் புத்தகத்தைக் காட்டி, 'பெங்கால் வரலாறு பற்றிய புத்தகம்... என் அத்தை கிட்ட இருந்து எடுத்து வந்தேன். அவங்க கிட்ட இதுமாதிரி நிறைய இருக்கு' என்றுசொன்ன போது புத்தகத்திற்காக இல்லாவிட்டாலும் அந்த பாதையில் நிறைய தூரம் பயணித்திருந்திருக்கலாம் என்றிருந்தது.

மாலை வேளைகளில் மொட்டை மாடியில் நடக்கையில் தெரியும் மேகம், சிகப்பு விளக்கெரியும் தூரத்து டவர், சுற்றியும் முளைத்துக் கிடக்கும் மரம் செடியெல்லாம் பார்க்கும் போது கொல்கத்தாவைப் போலத்தான் இருக்கிறது. முச்சு விடும் சத்தம் கூடக் கேட்கும்... அந்த அமைதிக்காகவே சர்வசுதந்திரமாய் வீடெல்லாம் நடமாடும் குருவிகள் போய் மாறி மாறி நடமாடிக் கொண்டிருக்கும் மகளோ மகனோ இது சென்னை என்று நினைவு படுத்துகிறார்கள். ராத்திரிகளில் திடீரென்று கலையும் தூக்கத்தில் உணரும் வெறுமையை அசை போடும் அனுபவமும் புதிதாய் இருக்கிறது. தடுமாற்றத்தோடு அலைபாயும் பந்து போல உணர்கிறேன். நிதானத்திற்கு வரும் போது அல்லது நிதானத்திற்கு வருவதற்காகவேயாவது மறுபடியும் எழுத ஆரம்பிக்க வேண்டும். சொல்ல கொஞ்சம் கொல்கத்தா கதை இருக்கிறது.

10 comments:

பிச்சைப்பாத்திரம் said...

//சொல்ல கொஞ்சம் கொல்கத்தா கதை இருக்கிறது.//

Keep writing.

- Suresh kannan

Chithran Raghunath said...
This comment has been removed by a blog administrator.
Chithran Raghunath said...

சென்னை தங்களை இனிதே வரவேற்கிறது

Sathish said...

Past...

G.Ragavan said...

வாங்க வாங்க கதை சொல்ல வாங்க...காத்திருக்கிறோம்.

Anonymous said...

ஒண்ணரை வருசமா எதிர்த்த வூட்டு ஆளுகிட்டக் கூடப் பேசாம இருந்தா, நடுராத்திரில முழிப்பு வரும்போது வெறுமை வராம என்ன செய்யுமாம்?

என்னமோ, நல்லதா நாலு கதை சொல்லி, ந்ல்லா இருங்க!

சாத்தான்குளத்தான்

Nirmala. said...

எழுதணும் சுரேஷ். பெங்காலி சினிமா கதை பாதியிலே ரொம்ப நாளாய் நிற்கிறது. வரவேற்புக்கு நன்றி சித்ரன். இந்த பதிவுக்கு பதில் எழுதாதது தெரியவேயில்லை.

ஆசிப்... பேசாம இருந்தது கொல்கத்தாவில். வெறுமை இங்கே சென்னையில்! விவரமாச் சொல்லாட்டி மக்களுக்கு ஒன்னும் புரியரதில்லை... ம்ம்ம் என்னத்த செய்ய!

ராகவன்... கதை சொல்லறேன் சொல்லிட்டு சோம்பேறித்தனத்தில் கம்பி நீட்டலாம்னு பார்த்தா ஆளாளுக்கு நியாபகப் படுத்தறீங்களே!

சதீஷ் உங்க ஒரு வார்த்தை பின்னூட்டங்களுக்கு நன்றி.

துளசி கோபால் said...

என்னங்க நிர்மலா,
சென்னைக்குப் பழகியாச்சா? சந்திக்க முடியாமப் போச்சு இல்லே? அதுசரி, ஒன்னரை வருசம் நேருலே பார்த்துக்கிட்டு
இருந்தவங்ககூடவே பேசலையாம், இதுலே வெறும் அஞ்சே வாரம் இல்லையில்லை மொதநாள் வந்து இறங்குனதாச்
சொன்னீங்க அப்ப ஒரு நாள்தானே எப்படி சந்திச்சு இருக்க முடியும்?

சென்னைக்கு மறுபெயர் 'சத்தம்'! இதுதெரியாதா?

சரி சரி. கதைகளை எடுத்து விடுங்கப்பா.

Sudhakar Kasturi said...

கல்கத்தா கதை கேட்க நானும் ஆவலாயிருக்கேன். சீக்கிரம் ஆரம்பிங்க. சூரத் கதைதான் அதிகம் கேக்கமுடியல.
anpudan
K.Sudhakar

Nirmala. said...

துளசி, ஆசிப் கூட சேர்ந்துட்டு நீங்களுமா? சந்தர்ப்பம் கிடைச்சா விட மாட்டீங்களே?!

சுதாகர், என்ன திடீர்னு எல்லாரும் கதை கேட்க ரெடியாயிட்டீங்க?!