Tuesday, August 16, 2005

எத்தனை முறை காதல் கொண்டேன்?

கவிதை வரிகளால்
காதல் விதைத்தவனிடம்

இறகாய் குரலால்
தீண்டிச் சென்றவனிடம்

தனித்த வேளையில்
துணையாய் நின்றவனிடம்

தவித்த பொழுதில்
தூணாய் சுமந்தவனிடம்

சிறகை விரித்துப்
பறக்கச் செய்தவனிடம்

சிந்தனைச் சிதறலில்
சிலிர்க்க வைத்தவனிடம்

அழுத கணங்களில்
அமைதி காத்தவனிடம்

அத்தனையும் மெல்ல
மறந்திட செய்தவனிடம்....

துளிகளாய் நனைத்ததெல்லாம்
தேடலைத்தான் தூண்டியது!

மொத்தமாய் நனைய வேண்டும்
அருவியாய் ஒருவன் வேண்டும்.

இந்தக் கவிதை 'புத்தகப் புழு'வில் பாரா வைத்த காதல் கவிதைப் போட்டியில் எழுதியது. செல்வராகவன் 'காதல் கொண்டேன்' படத் தலைப்பை இந்த கவிதையில் இன்ஸ்பயர் ஆகித்தான் வைத்திருப்பாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்! (நெனைப்புத்தான்).

ஆனா இந்தக் கவிதைக்கு இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா?

'... ஓட்டைச் செம்புல குளிக்கிற மாதிரி இவரோட குடித்தனம் பண்றேன். தடேர்னு விழற அருவி மாதிரி நீ கிடைச்சப்போ அருவியை விட்டுட்டு வெளியே வர முடியலை....'

யார் சொன்னது? கண்டு புடிங்க பாக்கலாம். க்ளு தேவையிருக்குமா என்ன?

12 comments:

Ramya Nageswaran said...

நிர்மலா, வரிகள் அருமை.. பரிசு கிடைச்சுதா?

நீங்க கடைசியா சொல்லியிருக்கிற வரிகள்..?? ம்ம்?? ஒரு வேளை ஏதாவது ஜெயகாந்தன் கதையில் வருபவையோ? (contextஐ புரிந்து கொண்டதாக நினைத்து யூகிக்கிறேன்!)

Anonymous said...

இல்ல ரம்யா. பரிசை புகாரி தட்டிட்டு போய்ட்டார்!

பதில்... யாராச்சும் ட்ரை பண்ணறாங்களான்னு பாக்கலாமே!

posted by: nirmala

Chandravathanaa said...

புகாரியின் சில கவிதைகளை நானும் படித்து ரசித்திருக்கிறேன்.
மனதில் நிற்கக் கூடிய விதமாக நன்றாக எழுதியுள்ளார்.

நிலா
விடுமுறை நேரத்தில் நட்சத்திரமாக வந்துள்ளீர்கள். உறவுகளோடு களித்திருப்பதால்
வழமையான அளவுக்குக் கூட தற்சமயம் உங்கள் பதிவுகளை வாசிக்க முடியாதுள்ளது.

நான் வாசிக்காவிட்டால் என்ன! நிறையப்பேர் வாசித்து மகிழுவார்கள்.
எழுதுங்கள்.

posted by: Chandravathanaa

Anonymous said...

சந்திரா... புகாரி கவிதைக்கு நானும் ரசிகை.

உறவுகளோடு உங்கள் பொழுது இனிமையாய் கழிய எனது வாழ்த்துகள்.

posted by: nirmala

லதா said...

பாலகுமாரன் ?

posted by:

Anonymous said...

பாலகுமாரன் ??

posted by: dharumi

Anonymous said...

மெர்க்குரிப்பூக்களில் சியாமளி சங்கரனிடம்

அல்லது

ஏதோ ஒரு நதியில்

அவர் அடல்ட்ரியை புருஷனின் பார்வையிலும், மனைவியின் பார்வையிலும், மூன்றாமவனின் பார்வையிலும் மூன்று முறை எழுதிப்பார்த்தார். அதைல் ஏதோ ஒன்று.

ஒண்ணு தெரியுமோ, ஓட்டை செம்புல முகர்ந்து குளிக்கறதுல ரிஸ்க் இல்லை. அருவி தடக்குனு மல்லாத்திடும்ங்கிறதுக்காகவே பேர்பாதி செம்புல காக்காய் குளி குளிச்சுடுது.

சைக்காலஜி படிக்கறீங்களே...உங்களுக்கு புரியாததா..??

கவிதை இப்படித்தான் படிச்சேன். சூப்பர்.posted by: மூக்கு சுந்தர்

Anonymous said...

லதா, தருமி... பாதி சொல்லிட்டீங்க.

சுந்தர்... முதல் யூகம் தான் சரி.

//ஒண்ணு தெரியுமோ, ஓட்டை செம்புல முகர்ந்து குளிக்கறதுல ரிஸ்க் இல்லை. அருவி தடக்குனு மல்லாத்திடும்ங்கிறதுக்காகவே பேர்பாதி செம்புல காக்காய் குளி குளிச்சுடுது//

வாஸ்தவம்.

posted by: nirmala

Anonymous said...

ஸிலென்cஎ cஅன் பெ தெ பெச்ட் அப்ப்ரெcஇஅடிஒன் அட் டிமெச்... ணல்ல படைப்பு..
னல்ல ரசனை....

-Dஎவ்
க்ட்ட்ப்://மின்ட்cருஷெச்.ப்லொக்ச்பொட்.cஒம்/

posted by:

Anonymous said...

Silence can be the best way to appreciate at times...
Nalla padaippu... nalla rasanai

-Dev
http://mindcrushes.blogspot.com/

posted by:

Unknown said...

Silence can be the best way to appreciate at times...
Nalla padaippu... nalla rasanai

-Dev
http://mindcrushes.blogspot.com/

Anonymous said...

Thanks Dev. Got it.

Nirmala.

Btw... i visited ur blog... why this thanglish... couldnt read long :-(

posted by: nirmala